
பதினொரு மாதங்கள்
பதினொரு நாட்களுக்குப் பின்..
இந்தப்
பதியனில்
பதிக்கும் முயற்சி
இம்முறை
தொடர்ந்து
மலர வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு
உள்ளுக்குள்
காலச் சூழ்நிலையும்
காலன் நிகழ்த்திய
பேய்க் காற்றும்
ஓய்ந்து விட்டதுபோல்
ஓர் உணர்வு
தாழ் விலக்கி
வெளிவர
கதவருகில் துடிக்கும்
கனவுகள்
என்னத்தாலோ
கட்டுப்படுத்தப்பட்ட
சுருக்கு நெகிழ்ந்த
எண்ணத் தாள்கள்
துளிர்க்கத்
துடிக்கும்
தூரிகை முனை
இறைவா
இது தொடர்ந்திட
துணையாய்
தொடர்ந்திடு.
படம் : இணையத்திலிருந்து
4 comments:
//தொடர்ந்து
மலர வேண்டும்//
தொடர்ந்து மலரட்டும். வாழ்த்துகள்.
மீண்டு(ம்) வந்தது மகிழ்ச்சி, சரியான நேரத்தில்த்தான் மீண்டும் வந்துள்ளீர்கள், இன்னும் 20 நாட்கள் உள்ளது; அபாரமான கவிதையை எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் கவி சிறக்க வாழ்த்துக்கள்.........
வருக. தொடர்க! வாழ்க!
WELCOME !! :)
Post a Comment