
விவரம் புரியா வயதில்
கிடைத்த
தாயின் மடி சுகம் !
விரல் பிடித்து நடந்த
தந்தையின்
வியர்வை மணம் !
இறங்க மறுத்து
இறுக்கிப் பிடித்துக் கொண்ட
அக்காளின் இடுப்பு !
எதையோ பிடுங்கிக் கொண்ட போது
தம்பியிடமிருந்து வந்த
விசும்பல் சத்தம் !
இத்தனை
இளமைக்கால ரசனைகளும்
ஒரு நொடியில் மறந்து போயின! -
அவள்
விழியசைவைக் கண்டபோது !........
9 comments:
அடடா... என்ன ஒரு கவிதை பாஸ்... பாராட்ட வார்த்தையே இல்லை...
கல்யாணம் ஆன உடனே கவிதையோட ட்ரெண்டே மாறிப்போச்சே ஈ.ரா... அவர்களே...
அதுவும், அந்த முடிவில் வரும் இரு வரிகள்... ம்ம்ம்... பின்னுது...
இறைவன் கொடுத்த வரம் மறதி! அதையும் அவளை பார்த்தவுடன் எல்லாம் மறப்பது இயற்கை தானே!
ஈ ரா கவிதை நல்லா எளிமையா இருக்கு..
அடுத்ததா ஒரு வரி எழுதுவீங்க அப்புறமா ;-)
அனைத்தையும் மறந்தேன்
என் குழந்தையின் சிரிப்பில்
(அதென்னமோ கவிதை என்றால் மடித்து மடித்து எழுதனுமாமே!)
// அடடா... என்ன ஒரு கவிதை பாஸ்... பாராட்ட வார்த்தையே இல்லை... //
ரொம்ப நன்றி கோபி..
//கல்யாணம் ஆன உடனே கவிதையோட ட்ரெண்டே மாறிப்போச்சே ஈ.ரா... அவர்களே...//
ஐயா நான் கஷ்டப்பட்டு இப்பதான் இந்த 'அவர்களே'வை விட்டு இருக்கேன்....விட்டுருங்கன்னா... முடியல..
//அடுத்ததா ஒரு வரி எழுதுவீங்க அப்புறமா ;-)
அனைத்தையும் மறந்தேன்
என் குழந்தையின் சிரிப்பில்//
கோபி கிரி - "அவள் விழியசைவைக் கண்ட போது" என்னும் வரிகளை ஒரு விதத்தில் பார்த்தால் கோபியாரைப் போல தெரியும்.. மேலே உள்ள படத்தைப் பார்த்துவிட்டு அதே வரிகளை வேறு சிந்தனையில் பார்த்தால் - மகளின் விழியசைவில் தன் இளமையை மறந்த தகப்பனின் உணர்வும் தெரியும்....கிரியார் சொன்னார்ப்போல !
//(அதென்னமோ கவிதை என்றால் மடித்து மடித்து எழுதனுமாமே!)/
ஹி ஹி
நன்றி snkm...
முடிவு அருமை:)!
//இளமைக்கால ரசனை//களை விவரித்திருக்கும் விதத்தையும் வெகுவாகு ரசித்தேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி ராமலக்ஷ்மி
மறக்க வைத்தவளா மயங்க வைத்தவளா
அடக் கடவுளே.. நடத்துங்க நடத்துங்க.. கவிதை அழகா இருக்குதுங்க...
வருகைக்கு நன்றி ஸ்ரீராம் மற்றும் கலகலப்ப்ரியா
Post a Comment