
நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !
நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !
நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !
நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !
உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !
உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !
காலாற
நடந்து விட்டு வரலாம்
என்பர் பல பேர் !
நீயோ
நடந்து கொண்டே
இருந்ததால்
உன் கால்களை
என்றைக்கும்
ஆற விட்டதே இல்லை !
நங்கையரின்
எழில் கூந்தலும்
நாணித் தலைகவிழும்
உன்
மொட்டைத் தலையின்
கவர்ச்சி கண்டு !
ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!
ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !
நீ
நித்தியம்
அனுபவித்த
சோதனை எல்லாம்
உனக்கல்ல -
சத்தியத்திற்கே !
நீ
உன்னைப் பற்றிய
உண்மைகளை
ஒளிவு மறைவின்றி
உலகிற்குச் சொன்னவன் !
என்றைக்கும்
ஒடுக்கப்பட்ட
மக்களின்
ஒரே ஒரு மன்னவன் !
நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !
நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்கும் நீ
அன்பான தந்தாய் !
உன் மனம்
தெளிந்த குளம் போல்
இருக்கிறதே என்ற
பொறாமையில்
மதக் கல்லை
விட்டெறிந்து
பதம் பார்த்தவர்கள்
எம் முன்னோர் !
ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !
அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி
சட்டைப் பைகளில்
கசங்கலாய் ...... !
18 comments:
அத்தனை வரிகளும் சத்தியம்.
//அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி
சட்டைப் பைகளில்
கசங்கலாய் !//
முடிவாய் வந்த வரிகளோ சோகமான நிதர்சனம்.
நல்ல கவிதை ஈ.ரா.
நல்ல கவிதைங்க!!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி...
மிக்க நன்றி தேவன்மாயம் சார்..
namadhu thanthaikku oru azhagana piranthanaal parisu.VIZZY.
namadhu thanthaikku oru azhagana piranthanaal parisu.VIZZY.
//நீ
பாரெங்கும்
போரின் பந்தத்தை
வேரறுக்க
போர்பந்தரில் பிறந்த
புனிதக் குழந்தை !//
தொடக்கமே அருமை நண்பர் ஈ.ரா.அவர்களே.
//நீ
சென்ற நூற்றாண்டின்
சிராவணன் !
அதிசயமாய் வந்த
அரிச்சந்திரன் !//
ம்ம்ம்... நல்லாருக்கு...
//நீ
கொடுத்த
வாக்கையே
வாழ்க்கையாய்க்
கொண்டவன்!
நீர் காற்று மட்டுமே
நெடுநாள் உணவாய்
உண்டவன் !//
சூப்பர்...
//நீ
கறுப்பர் இனத்துக்கு
கடவுள் தந்த
பிரதிநிதி !
கருணை குணத்திலோ
கடவுளின்
பிரதி நீ !//
இதை படிக்கும்போது, தென்னாப்பிரிக்காவில் ரயிலில் இருந்து காந்தியடிகள் தள்ளி விடப்பட்டது ஞாபகம் வருகிறது...
//உனது
ஒற்றை பார்வை
பல
துப்பாக்கிகளை
துவளச் செய்தது !
உனது
வெற்று மார்போ
பல
பீரங்கிகளை
மழுங்கச் செய்தது !//
உண்மைதான்... உடல் மெலிதெனினும், உள்ளம் இரும்பு போன்றது...அஹிம்சையோ இவரின் மிகப்பெரிய பலம்...
//ஒரு
சாம்ராஜ்யத்தையே
அசாதாரணமாய்
அடிபணிய வைத்த
உன்
பொக்கைச் சிரிப்பு
போக்ரானை விட
வலிமையானது..!//
சரிதான்....
//ஆட்டுப் பாலும்
அரைக்கடலையுமே
உனக்கு
ஆகாரம் !
ஆனாலும் இன்றைக்கும்
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !//
மனதில் என்ன ஒரு துணிவு வேண்டும் பீரங்கிகளை எதிர்த்து நிற்பதற்கு??
//நீ
அன்பை மதமாக்கி
அருளின்
வழி நின்றாய் !
அடித்தட்டு சனங்களை
அரியின் சனம் என்றாய் !
நீ
அரியாசனம் தன்னை
அடுத்தவர்க்கு தந்தாய் !
அறியா சனத்திற்க்கும் நீ
அன்பான தந்தாய் !//
வாவ்.... என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை... மற்ற வரிகள் இதற்கு சற்று குறைந்தவை இல்லை என்றாலும்...
//ஊருக்கே உப்பிட்ட
உன்னை மறந்து
உண்டு கொழுத்து
உப்பி(வி)ட்டோர்
எம் தலைவர் !
அதனால்தானோ
என்னவோ
எங்கள்
நெஞ்சுக்குள்ளே
இருக்க வேண்டிய நீ
சற்றே தள்ளி
சட்டைப் பைகளில்
கசங்கலாய் !//
தற்கால அசிங்கத்தை தோலுரித்து காட்டிய விதம் பாராட்டத்தக்கது...
ஈ.ரா.. இந்த அருமையான கவிதைக்கென, இதோ உங்களுக்கு என் ராயல் சல்யூட்...
ஈரா காந்திஜியை நினைவு கூறி எழுதியதற்கு நன்றி.
எத்தனை யுகம் ஆனாலும் இவரது புகழ் மங்காது. இவருடைய சத்தியசோதனை புத்தகம் படிக்காமல் இருந்தால் படிக்க முயற்சி செய்து பாருங்க. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
நன்றி விஜயன்...
கோபிஜி,
எந்த படைப்பையும் விரிவாக அலசி பின்னூட்டமிடும் உங்கள் வழக்கத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி...... உங்களோடு சேர்ந்து அந்த மகானை நானும் வணங்குகிறேன்...
//எத்தனை யுகம் ஆனாலும் இவரது புகழ் மங்காது. இவருடைய சத்தியசோதனை புத்தகம் படிக்காமல் இருந்தால் படிக்க முயற்சி செய்து பாருங்க. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.//
எட்டாம் வகுப்பில் ஒரு போட்டிக்காக முதன் முதலில் ஒரு பாகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.. இன்றும் படித்துக் கொண்டே இருக்கிறேன்... என்றும் படித்துக் கொண்டே இருக்கவேண்டிய புத்தகம்.. அவரைப் போலவே - அவர் வாழ்க்கையும்.
நன்றி கிரி
தமிழினி நன்றி.. இணைக்க முயல்கிறேன்.
அகிம்சையின் வெற்றிக்கு
நீயே
ஆதாரம் !//
அகிம்சையின் வெற்றி. Its true.
காந்தியை எப்போதும் மறக்காமல் இருக்க செய்யும், வரிகள்!
ஈ. ரா.,
தேச தந்தையை நினைவு கூறும் விதத்தில், மிகவும் அழகாக கவிதை வடித்துள்ளீர்கள். கவிதையின் ஒவ்வொரு வரியும் மிக அருமை. அதுவும், காந்திஜியின் lifestyle நிகழ்ச்சிகளை சிறப்பாக கவிதை வடிவில் கொண்டு வந்து, இன்றைய நிகழ்வுகளுக்கு compare செய்த உங்கள் நடையை மிகவும் ரசித்தேன்.
Hats Off. Keep it up.
அன்புடன் அருண்
//அகிம்சையின் வெற்றி. Its true.//
உண்மை...
நன்றி மாரிசெல்வம்
//காந்தியை எப்போதும் மறக்காமல் இருக்க செய்யும், வரிகள்!//
மறக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... நன்றி snkm
//ஈ. ரா.,
தேச தந்தையை நினைவு கூறும் விதத்தில், மிகவும் அழகாக கவிதை வடித்துள்ளீர்கள். கவிதையின் ஒவ்வொரு வரியும் மிக அருமை. அதுவும், காந்திஜியின் lifestyle நிகழ்ச்சிகளை சிறப்பாக கவிதை வடிவில் கொண்டு வந்து, இன்றைய நிகழ்வுகளுக்கு compare செய்த உங்கள் நடையை மிகவும் ரசித்தேன்.
Hats Off. Keep it up.
//
நன்றி அருண் ஜி ... இன்றைய அரசியல்வாதிகள் நிச்சயம் உபயோகிக்கக்கூடாத வார்த்தை "காந்தி " என்று நான் எப்பொழுதும் சொல்வேன்..
காமராஜ் கவிதையிலும் பின்வருமாறு எழுதி இருப்பேன் :
காமராஜ் -
நீ
கையூட்டுப் பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.!
அருமை நண்பரே , காந்திஜியின் பற்றி ducumentry பார்த்தது போன்ற உணர்வு . விரைவில் ஒரு உண்மையான காந்தி தமிழ் நாட்டுக்கு கிடைப்பார் ..
- vasi.rajni
ஒவ்வொரு வரியும் அருமை..!
நன்றி வசி.ரஜினி,
நன்றி கலகலப்ப்ரியா
ஈரா இந்த கவிதை பற்றி நமது Onlysuperstar.com தளத்தில் நீங்கள் பின்னூட்டமளித்தபோதே படித்துவிட்டேன். இருப்பினும் இங்கு வந்து பின்னூட்டமளிக்க ஆசைப்படுகிறேன்.
அண்ணல் காந்தியை பற்றியும் அவரின் கொள்கைகளையும் இன்றைய தலைமுறையும் அரசியல் தலைவர்களும் மறந்துவிட்ட நிலையில் இது போன்ற கவிதைகள் மூலம் மட்டுமே வருங்கால சமூகம் தெரிந்துகொள்ளும்.
பெர்னார்ட்ஷா என்று நினைக்கிறேன்... ஒரு முறை கூறியது: "இந்த பூமியில் இப்படி ஒரு மனிதர் ரத்தமும் சதையுமாக நடமாடினார் என்று எதிர்காலத்தில் கூறினால் அவர்கள் நம்பவே மாட்டார்கள்."
வாழ்த்துக்கள்.
- சுந்தர்
Onlysuperstar.com
//ஈரா இந்த கவிதை பற்றி நமது Onlysuperstar.com தளத்தில் நீங்கள் பின்னூட்டமளித்தபோதே படித்துவிட்டேன். இருப்பினும் இங்கு வந்து பின்னூட்டமளிக்க ஆசைப்படுகிறேன்.//
வாங்க ஜி ,
மிக்க நன்றி..
சிலேடைகளில் விளையாடியிருகீறீர்கள் ஈ.ரா. ரொம்ப நல்லா இருக்கு.
நீர்... காற்று... எனச் சொல்லி அந்த நீரில் தண்ணீர் மற்றும் நீர்(காந்தி) என பொருள் பட எழுதியது சூப்பர்.
அரி சனம். உப்பு இரண்டும் நல்ல ஆழமான கருத்துக்கள்.
நெஞ்சுக்குள்ளே இல்லாமல் கரன்ஸியாய் கசங்கலாய் என்ற வார்த்தையிலும் நிமிர்ந்து நிற்கிறது தங்கள் எழுத்து.
நல்ல தமிழ் படிக்கும் போது நெஞ்சம் நிறைகிறது. நன்றி நண்பா.
(www.padukali.blogspot.com)
Post a Comment