Saturday, June 6, 2009
தேவையில்லை
சில நேரங்களில் சில மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வரும்....அவர்களுக்காக இது....
போலிச் சிரிப்பு
தேவையில்லை!
வலுக்கட்டாயமாக
வரவழைத்துக்கொண்ட
வாய்ப்புன்னகை
தேவையில்லை!
கட்டித் தழுவி அரவணைக்கும்
கள்ளமுள்ள அன்பு
தேவையில்லை!
பத்துப் பேர் முன் பாராட்டி - பின்
புறம் பேசத்
தேவையில்லை!
மொத்தத்தில் எனக்கு உங்கள்
வாழ்த்தும் தேவையில்லை!
வைதலும் தேவையில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஈரா அசத்தல்..
ஆளை விட்டா போதும்னு சொல்றீங்க..:-) எனக்கு கவிதை எழுத வராது ..இதை நான் எழுதியதாகவே நினைத்துக்கொள்கிறேன்
/ எனக்கு கவிதை எழுத வராது /
எனக்கும்தான்...அதனால்தான் பெரும்பாலும் நான் சில வரிகள் என்றே கூற முயல்கிறேன்....
Post a Comment