Wednesday, July 15, 2009
கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்
வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .
நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.
விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.
நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.
நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.
பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.
அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.
வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.
நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.
உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.
நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.
நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.
நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.
நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!//
ராம்ஸ்,
ரொம்பவும் நொந்துபோக வைத்த வரிகள் அவை.
கழகங்களிடமிருந்து என்று விடுபடுகிறார்களோ, அன்றுதான் தமிழர்களின் தலை நிமிரும்.
அன்புடன் அருண்
//நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.//
அழகான வரிகள், ஆழமான கருத்துகள் ஈ ரா-ஜி!
//நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!//
அருமை ஈ ரா
அனைவரும் மறந்த (காங்கிரசார் உட்பட) நிலையில் இருக்கும் தலைவரை மறக்காமல் நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி
Rams,
Very gud writting....keep going
Hi Raams
Congratulations... Your poetry is superb and today only I know about this blog.. Really Fantastic
Hats off to you... Please continue.
WISH YOU A HAPPY MARRIED LIFE ....
Welcome Back eppdi poguthu new life...
kadasi vari ennai rombavum paathithu vitathu
Nam thalai nimirthida varuvar
nam thalaivar Rajnikanth
by,
hari.sivaji
அருண், கிரி, பாசகி,காமேஷ்வர ராவ் , விஜி, ஹரி வருகைக்கும் தங்கள் கருத்துக்கும் நன்றி,
nalla karuthkkal. ippo ellarum unara vendiyavaigal, mukiyama arasiyalvadigal.
nandri.
endrum vazhga vazhamudan
ஈ ரா-ஜி மன்னிக்கனும், இப்போதான் உங்களுக்கு சமீபத்துல திருமணம் நடந்ததே தெரிஞ்சது. உங்க மணவாழ்க்கை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் அமைய வாழ்த்துகள்!
Hum its a true word.! when will our tamil nadu peoples maintain union that day only good morning for all still mid night only going!!!!
Post a Comment