பொய்யான கோபங்களும்
சின்னச் சின்ன தாபங்களும்
அதீதமான வியப்புக்களும்
அபத்தமான பேச்சுக்களும்
ஆழமான தேடலும் கொண்ட
நிஜமான காதல் !
இது
நிழல் மனிதர்கள் தொடர்ந்தாலும்
நெருஞ்சி முற்கள் நெருடினாலும்
கருங்கற்கள் இடறினாலும்
காயம்பட்டு நொந்தாலும்
தொடர்ந்து செல்கின்ற
தொட்டாச் சிணுங்காக் காதல் !
அவள் பார்க்கிறாளா என்று அவன் பார்ப்பதையும்
அவன் பார்க்கிறானா என்று அவள் பார்ப்பதையுமே
தமக்குப்
பார்வை கிடைத்ததன்
பயனாக உணர்கிறார்கள் !
மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !
இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !
அவன் யார் ? அவள் யார் ?
முழுவதும் அறியும் முன்னே
முன்னுரை வரைகிறார்கள் !
தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !
பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !
இத்தனை வருடம் இல்லாமல்
திடீரென்று
காசு கொடுத்து
கிரீட்டிங் கார்டு வாங்கத் தோன்றுகிறது !
கவிதையென்ற பெயரில்
கன்னாபின்னாவென்று
கிறுக்கத் தோன்றுகிறது !
காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !
யூத் விகடனில் படிக்கபடம் இணையத்திலிருந்து
11 comments:
பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !
KAVITHAI SUPER!!!
நல்லாயிருக்கு ஈ ரா:)! யூத் விகடனிலேயே வாசித்து விட்டிருந்தேன். வாழ்த்துக்கள்!
நன்று, நன்று!
பாராட்டுகள் ஈ.ரா.
//தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !//
அருமை ஈ.ரா
/// பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது ///
கில்லி .. கில்லி ... கில்லி.. மாதிரி அடிச்சிங்க பாருங்க !!
தங்களின் அற்புதமான படைப்பு விகடனில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள் ஈ.ரா...
தலைப்பே வித்தியாசமா இருக்கு... அப்போ படைப்பை பற்றி கேட்க வேண்டுமா?!
//மாலையிலே பிரிந்து
மனைக்கு செல்கையில்
மனையில் ஏறி
மாலை சூடும் நாளை நினைத்து ஏங்குகிறார்கள் !
இரவுப் பொழுது
எப்படி நகரப் போகிறது என்று
பயந்து தூங்காமலே தூங்குகிறார்கள் !//
மிக மிக அருமை... அனுபவித்து, ரசித்து எழுதி இருக்கிறீர்கள் தலைவா...
//தன் வீடு எதிரியின் குகையாகிறது !
தன் சொந்தம் கொடும் பகையாகிறது!
எதிர் பால் நீ இருக்கையிலே
எதிர்ப்பார் தேவையில்லை என்கிறது !//
பலே பலே
//பல்லியைப் பார்த்து அவள்
பயப்படுகையிலே
பல்லியைப் பிடித்து
பயில்வான் பேர் வாங்கி
பல்லிளிக்கத் தோன்றுகிறது !//
பள்ளியில் பயில்வான் இந்த பல்லி பிடி பயில்வான்...
//காதல் -
தோணக் கூடாததைஎல்லாம்
தோணச் செய்கிறது !
தோணுவதை எல்லாம்
தேடச் செய்கிறது !//
தோணுச்சா... தேடறீங்களா... கிடைத்ததும் சொல்லி அனுப்புங்கள்...
அற்புதமுங்க... அருமையான கவிதை.
என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
வாழ்கவளமுடன்.
இவன் வி.என்.தங்கமணி
மிக்க நன்றி
தேவன் மாயம்
ராமலக்ஷ்மி
snkm
வானம்பாடிகள்
thenammailakshmanan
கேசவன்
கோபி
வி என் தங்கமணி மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்.
ரொம்ப நல்லா இருக்கு ஈ.ரா, பாராட்டுகள்.
ஈரா காதலன் காதலி உணர்வுகளை அப்படியே கூறி உள்ளீர்கள்....எளிமையாக :-) அருமை.
பல்லி மேட்டர் சூப்பர் ;-)
Post a Comment