Thursday, July 29, 2010

எரிமலையை எட்ட நின்று பார்க்கலாம், ஏற முடியுமா ?


ஏதாவது பெயர் வேண்டுமென
ஆசைப்பட்டால்
அதற்குப் பெயர்
பெயர் ஆசை..!
சூப்பர் ஸ்டார் பெயர்
வேண்டுமென்றால்
அதற்குப் பெயர்
பேராசை என்று
இப்போது
தெரிந்திருக்கும் - பலருக்கு !

இனி
எந்திரனின்
சாதனைகளுக்கு முன்
வாலாட்ட யாரும்
எந்திரிக்கவே முடியாது..!

பணம் போட்டவர்களை
போண்டியாக்கும்
பாப்பர் ஸ்டார்களுக்கு
மத்தியில்
இந்த தங்க மகன்
மட்டும்தான்
நிஜமான
சூப்பர் ஸ்டார் !

பட்டையைக் கிளப்புற பட்டம்
படையப்பனுக்கு மட்டும்தான்..!
அவர் வேண்டுமானால்
அதை
சட்டை போல
கழட்டிப் போடலாம்!
அது அந்த
மனிதனின் பெருந்தன்மை !

அதை
மற்றவர்கள் பார்க்கலாம்..
அணிந்து கொள்ள முடியாது !
அப்படி முயன்றால்
அதற்குப் பெயர்
சட்டை அல்ல
சேட்டை !...

சூப்பர் ஸ்டார் என்பது
நடிப்பினால் வந்ததல்ல !
அது
வாழும் முறையின்
படிப்பினால் வந்தது..!
பல முறை
பல பேரின்
பொறாமைத் தீயினால்
வெந்தது..!

அவர்
கட்டாந்தரையில்
துண்டை விரித்துப் படுப்பார்..!
வாங்கிய காசுக்கு
தன்னையே பொரித்துக் கொடுப்பார்..!

அவர்
அசதிகள் மறைய
வசதிகள் கேட்பதில்லை !
வசதிகள் வந்தும் - பழைய
வாழ்வை மறப்பதில்லை !

அவருக்கு
தூக்கம் வரும்
மரத்தடியில் !
ஏனென்றால் -
துக்கம் இல்லை
அவர்
மனத்தடியில் !

அவருக்கு
தூக்கம் வரும்
தெருவோரத்திலும்!
ஏனென்றால் -
ஏக்கம் அவரிடம்
இல்லை
ஒரு ஓரத்திலும் !

அவர்
என்றைக்கும்
நினைக்காத வார்த்தை
நான் !
அதனால்தான் அவர்
இன்றைக்கும்
உண்மையான
டான் !

அவருக்கு
ஒரே ஒருவன்தான் முதலாளி !
ஆனாலும்
இன்றைக்கும் அவர்
எழுந்து நிற்பார் -
பணம் போட்ட மனிதனைப்
பார்த்து..!

குருநாதர்களைப்
பார்க்கையில் -
அவர் கண்கள்
பாதங்கள் தேடும்..!
கூட்டங்கள்
புகழ்கையில் -
அவர் கால்கள்
இமயத்திற்கு ஓடும் !

அவர் ஒரு
கடினமான பாதையை
மற்றவர்களுக்காக
ராஜபாட்டையாக்கிக்
கொடுத்திருக்கிறார். !

தனிமனிதனாக
தனி வழிகளை
உருவாக்கித் தந்திருக்கிறார் !

அந்த சாலையின் நிழலில்
வேண்டுமானால்
சொகுசாக உங்கள்
பயணங்களைத்
தொடருங்கள் !
அல்லது புதிதாய் ஏதேனும்
பாதையைக் காணுங்கள்..!

அதை விடுத்து
நன்றி மறந்து
பள்ளம் தோண்டாதீர்கள்..!
தோண்டினால்
நீங்கள் வெட்டிய குழியில்
நீங்களே விழுவீர்கள் !
எதிர்காலம் உங்களை
ஏளனப்படுத்தும்..!

உலக அரங்கில்
தமிழ்த்திரையை
திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர் !
அவர் முதுகிலேயே
சவாரி செய்து விட்டு
பச்சைக் குதிரை விளையாடலாம் என்று
நினைக்காதீர்கள்..!

அவர்
பச்சைக் குதிரை அல்ல
போர்க்குதிரை !
ஒரு முறை சிலிர்த்தால்
சிதறிப் போவீர்கள் !

ரஜினியின் காலத்தில்
சக கலைஞனாக இருப்பதில்
பெருமைப்படுங்கள் !
சம கலைஞனாகி விடலாம் என்று
கனவு காணாதீர்கள்..!
ஏனெனில் ரஜினி ஒரு
சரித்திரம்!


எரிமலையை எங்கிருந்தோ பார்க்கலாம்.
ஏறி நின்று பார்க்கலாமா?
சூரியனை எட்டிப் பார்க்கலாம்..
எட்டிப் பிடிக்க நினைக்கலாமா?


சிறு பிள்ளைகளே !
உங்கள் தந்தை காலம் முதல்
உங்கள் பிள்ளைகள் காலம் வரை
இன்றைக்கும் அவருக்கு
இரண்டாம் இடம் என்றால்
என்னவென்றே தெரியாது!
அவருக்கு நீங்கள்
மாற்று என்றால்
பாவம் நீங்கள் -
மன நலம் குன்றியவர்கள்தான்!

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு
தூக்கத்தை தொலைக்காதீர்கள் !
இனியாவது நிம்மதியாய்த்
தூங்குங்கள் ! - நாளை
எழுந்திருக்கும்போது
நீங்களே நீங்களாய்ச்
சுயமாய் நடங்கள் !
இல்லையேல்
உங்களுக்கு
தூக்கத்தில் நடக்கிற வியாதி என்று
தூற்றப் போகிறார்கள்...!


படம் : நன்றி : சிம்பிள் சுந்தர்

25 comments:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

ஆகா கலக்கல்!

http://lordmgr.wordpress.com

vasu balaji said...

வாங்க ஈ.ரா. தலைவர் படம் மாதிரி உங்க இடுகையும் ரொம்ப நாளுக்கப்புறம்.

M Arunachalam said...

கலக்கிட்டீங்க ஈ.ரா. ஒவ்வொரு பாராவும் நெத்தி அடி.

சூடு, சொரணை இருக்கற மனுஷங்களுக்கு மட்டுமில்லாமல், சொரணை கெட்ட ஜென்மங்களுக்கும் உரைக்கிராமாதிரி, அதுங்க மண்டையிலே யேருராமாதிரி சும்மா 'நச்'னு ஒரு கவிதை எழுதி இருக்கீங்க.

நீங்க அனுமதி குடுத்தா இதை facebook இல் போட ஆசை - உங்க blog பேரையும் உங்க பேரையும் போட்டுதான்.

அன்புடன் அருண்

Unknown said...

Ee.Ra. Excellent

Kamesh
Botswana

ஈ ரா said...

நன்றி
ஜெகதீஸ்வரன் சார்
பாலா சார்
அருண் ஜி
காமேஷ் ஜி

ஈ ரா said...

//நீங்க அனுமதி குடுத்தா இதை facebook இல் போட ஆசை - உங்க blog பேரையும் உங்க பேரையும் போட்டுதான்.

அன்புடன் அருண் //

தாராளமாக ஜி..

kppradeep said...

பிரபஞ்ச நாயகனுக்கு ஒரு பிரமாதமான கவிதை

கிரி said...

ஈரா செமையா இருக்கு!

R.Gopi said...

தலைவா.....

ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்து பட்டைய கெளப்பி இருக்கீங்க.....

லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்து இருக்கீங்க...

உங்க கவிதை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது...

எந்திரனின் பெரு வெற்றிக்கு வாழ்த்தி, உங்களின் இந்த கவிதையையும் வாழ்த்தும்.... நான்....

ஈ ரா said...

நன்றி பிரதீப், கிரி அண்ட் கோபி ஜி

Raja said...

E.Raa கலக்கிட்டீங்க. தலைவர பத்தி எளிமையா அழகா, அதிரடியா எழுதியிருக்கிங்க.

ஈ ரா said...

நன்றி ராஜா

deen_uk said...

kalakkal pathivu boss..
ithu sentthu pona suraakkalukkum vudaintha villukalukkum avargal vutchi mandayil surrrrrrrrrendru yetruvathu pola solli irukkireergal..vaaltthukkal nanba..
keep it up..

deen_uk said...

kalakkal pathivu boss..
ithu sentthu pona suraakkalum vudaintha villukalukkum avargal vutchi mandayil surrrrrrrrendru yetruvathu pola solli irukkireergal..vaaltthukkal nanba..
keep it up..

Muthukumar said...

அசத்தல். ஒவ்வொரு வரியும் உண்மையை உரக்கச் சொல்கிறது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஈ. ரா.

ஈ ரா said...

நன்றி ஸைப்

நன்றி முத்துக்குமார்

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

mrs.krishnan said...

Arumai, arumai. Ippodhan mudhal murai unga bloguku varen.

Indha kavidhayai Deen ennum rasigar onlysuperstar.comla unga blog peroda anupi irundhar. Thalaivar pathina padhiva irukenu vandhu partha... EE.RAA sir neengala? Romba sandhosham sir. Unga tamil aalumai miga arumai.

ஈ ரா said...

Thanks Mrs.Krishnan for first visit and comment

சிங்கக்குட்டி said...

அடிரா சக்கை,அடிரா சக்கை அடிரா அடிரா...
ஈ.ரா சூப்பர்.

ஆங்காங்கே ஒன்னு ரெண்டு குப்பைகள் வந்து விழுந்தாலும், நெருப்புக்கு ஏது வித்தியாசம், இதுபோல இடுகைகள் அவை அனைத்தையும் எரித்து ஒரே சாம்பலாக்கி விடும்.

ஈ ரா said...

நன்றி சிங்கக்குட்டி

Anonymous said...

ரஜினிகாந்த் பற்றி எழுதப்பட்ட இடுகையை பாருங்கள் http://dondu.blogspot.com/2010/09/blog-post_04.html

தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் said...

அருமை, வாழ்த்துக்கள்

எப்பூடி.. said...

இப்போதுதான் உங்கள் பதிவை பார்த்தேன், சூப்பர். மீண்டும் கவிதையால் தலைவரை பற்றி பின்னி எடுத்திருக்கிறீர்கள். நன்றி

ஈ ரா said...

நன்றி எப்பூடி...

Post a Comment