Saturday, December 11, 2010

தலைவா நீ வாழ்க

இந்த ஆண்டு மிகை இல்லாமல் யதார்த்தமாக தலைவரைப் பற்றி எழுதவேண்டுமென்று நினைத்து ரசிக நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..



நாற்பதாண்டுகளுக்கு முன்
நீ
கண்டக்டர் -
ஆனால்
இன்றைக்கும்
உம் காந்தக்
கண் டக்கர் !

உனக்கு
எந்த ஸ்டேஜில்
நிறுத்த வேண்டும்
என்றும் தெரியும் !
எப்போது
"போலாம் ரைட்" என்று
டபுள் விசில்
கொடுக்கவேண்டுமென்றும்
தெரியும் !

நீ அகலக்கால் வைத்துவிட்டு பின்பு
யாசிப்பது இல்லை !
ஆனால்
வைத்த கால் அகலக்கூடாது
என்பதற்காக நிறைய
யோசிப்பது உண்டு !

நீ
உன் முதுகில்
குத்தும்
அம்புகளையும்
நம்புபவன் !
எவர்
நட்டமடைந்தாலும்
மனம்
வெம்புபவன் !

உன்
யதார்த்தமான
சிரிப்புக்குக் கூட
ஏதேதோ அர்த்தம்
கற்பிக்கப்படும் !

உன்
சாதாரண
வார்த்தைகளுக்குக் கூட
பொழிப்புரைகளும் தெளிவுரைகளும்
பொங்கி வரும் !

நீ
வம்பே வேண்டாமென
விட்டுக் கொடுத்தால்
வானம் பார்க்கும்
வாயில்லா ஜீவன்களுக்குப்
போட்டி வரும் !
வண்டி வண்டியாய்
பேட்டி வரும் !!


அதெப்படி
உன் அசைவில் உதிர்ந்த
கனிகளை மடியில்
கட்டிக் கொண்டே
கல்லெறியத்
துடிக்கின்றன
பல கைகள் ?

அது ஏன்
உன் வாக்கு ஸ்தானத்தை
மட்டுமே
உற்று நோக்குகின்றன
பல்லாயிரம்
ஏழாம் பார்வைகள் ?

நீ
நின்றால் குற்றம்
உட்கார்ந்தால் குற்றம்
என்று
பல பேர் குதிக்கிறார்கள் !

ஏனென்றால்
அவர்களுக்குப் பயம்
நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !

நீ
வெற்றி மாலைகளை
தோள்களில் ஏற்பதில்லை !

ஏனெனில்
கணப் பொழுதில் அவற்றை
உன் சகாக்களின்
கழுத்துக்கு
மாற்றி இருப்பாய் !

உன் சகாக்களோ
தோல்வியையே
ருசித்ததில்லை !

ஏனெனில்
இமைப்பொழுதில்
முன்னே வந்து
சூழ்ச்சிக் கத்திகளை
நீ மட்டும்
மார்பில் சுமப்பாய்..!

இதில் அதிசயம்
ஏதுமில்லை !
ஏனெனில்
நீ அந்த
அருணாச்சல நீலகண்டனின்
பக்தன் அல்லவா ?

எங்கள் தலைவனே !
நீ
கூட்டமான பேருந்திலும்
இப்படி நுழைந்து
அப்படி வெளியேறி விடுவேன்
என்று இனியும்
பெருமைப்பட்டுக் கொள்ளாதே !!

உள்ளே நுழைந்த
நீ
வெளியேற முடியாத
இடம் ஒன்று உள்ளது...
அது

எங்கள் இதயம் !!!

வாழ்க ரஜினி....

16 comments:

எப்பூடி.. said...

//அதெப்படி
உன் அசைவில் உதிர்ந்த
கனிகளை மடியில்
கட்டிக் கொண்டே
கல்லெறியத்
துடிக்கின்றன
பல கைகள் ?//

//நீ
கூட்டமான பேருந்திலும்
இப்படி நுழைந்து
அப்படி வெளியேறி விடுவேன்
என்று இனியும்
பெருமைப்பட்டுக் கொள்ளாதே !!

உள்ளே நுழைந்த
நீ
வெளியேற முடியாத
இடம் ஒன்று உள்ளது...
அது//

superb one, thanks.

ஈ ரா said...

ஜீவா , நீங்க போட்ட பின்னூட்டத்திற்குப் பிறகுதான் எழுதினேன் ...

நன்றி

Mrs. Krishnan said...

//ஏனென்றால்
அவர்களுக்குப் பயம்
நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !//

சூப்பர் ஸ்டாருக்கான சூப்பர் வரிகள். சும்மா ஒவ்வொரு வரியும் வைரம்.

எப்படிங்க இப்படி எல்லாம் எழுதறீங்க? நீங்க நிறைய எழுதணும்கற என்னோட வேண்டுதலை திரும்பவும் விடுக்கிறேன்.

Raja said...

ஈ.ரா. கலக்கிட்டீங்க!!!

நீ
ஒருநாள்
நிற்க வேண்டிய இடத்தில்
நின்று
அமர வேண்டிய இடத்தில்
அமரப் போகிறாய் என்று !

பனித்துளி சங்கர் said...

முதலில் இதை தலைவனுக்கு அனுப்புங்க . நல்ல இருக்கு பகிர்வுக்கு நன்றி

ஈ ரா said...

நன்றி திருமதி கிருஷ்ணன்,
நன்றி திரு. ராஜா
நன்றி திரு சங்கர்

Chitra said...

Great!!! கலக்கல் வாழ்த்து!

எப்பூடி.. said...

ஈ ரா

//ஜீவா , நீங்க போட்ட பின்னூட்டத்திற்குப் பிறகுதான் எழுதினேன் ...//

மிக்க நன்றி

Unknown said...

அருமை அருமை. ஒவ்வொரு ரசிகனின் மன ஓட்டம் இதுவே. உண்மையான மற்றும் அழகான வரிகள்.

தலைவருக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கிரி said...

ஈரா என்றால் அது அதிரடி கவிதை தான்..கலக்கிட்டீங்க! என்னை போன்றவர்களுக்கும் புரியற மாதிரி எழுதியதற்கு ;-)

ரொம்ப எளிமையா இருக்கு. தலைவர் தப்பிக்க முடியாத இடமும் உண்டு என்று அழகாக கூறி விட்டீர்கள் :-)

deen_uk said...

சான்சே இல்ல பாஸ்..! ஒவ்வொரு வரியும் நச்...! சிலர் புதுசா கவிதை எழுதி இருக்காங்களாம்!(அவர் பேசினாலே புரியாது..!இப்போ கவிதை வேற!! தாங்க முடியல! இதுல போட்டி போட்டு மீடியா விளம்பரம் ,பேட்டியிலும் அவரு கவிதை பற்றி புகழ்றாங்க!).. பாமர மக்களுக்கும் புரியுற மாதிரி சுவாரஸ்யமா எழுதணும்...உங்களை மாதிரி...அருமையான வார்த்தைகள்..திரும்ப திரும்ப படித்து அனுபவித்தேன்.வாழ்த்துக்கள்..

ஈ ரா said...

நன்றி சித்ரா ஜி
நன்றி முத்துக்குமார்
//கிரி said...
ஈரா என்றால் அது அதிரடி கவிதை தான்..கலக்கிட்டீங்க! //
நன்றி கிரி,
//என்னை போன்றவர்களுக்கும் புரியற மாதிரி எழுதியதற்கு ;-)//
ஜி, சாதாரணமா எழுதும்போதே எனக்கு புரியற மாதிரிதான் நான் எழுதுவேன்..அதனால பிரச்சினை இல்ல..

நன்றி தீன்,

Unknown said...

அருமையான கவிதை.

snkm said...

இப்பவாவது தமிழக மக்கள் மேல் அக்கறை கொண்டு சரியான பாதையில் தமிழகமும் இந்தியாவும் செல்ல துணை செய்வாரா?. இல்லை எப்போதும் போல கைகழுவி விடுவாரோ?

ஈ ரா said...

நன்றி ஜெய்,

நன்றி snkm, உங்களைப்போல்(நம்மைப் போல்) பலபேரின் எதிர்பார்ப்பு வீணாகக் கூடாது என்று பிரார்த்தனை செய்வோம், இதுவரையும் அவர் கை விட்டதில்லை, சரியான நேரம் வரட்டும்..

R.Gopi said...

தலைவா...

இதை எப்படி படிக்காம விட்டேன்னு தெரியல...

சூப்பர் கவிதை... எழுதறவங்க எழுதினா தான் அது கவிதையா வருது... (நான் என்னிய சொன்னேன்...)..

கலக்கல் வாழ்த்து கவிதை கலக்கல் மன்னனுக்கு....

Post a Comment