சிந்து நதியின் மிசை நிலவினிலே
தில்லி நன்னாட்டிளம் பெண்களுடனே
ஆங்கில டேப்புகளில் பேரங்கள் பேசி
ஸ்பெக்ட்ரங்கள் விற்று விளையாடி வருவோம்..
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
குடோன்களில் அழுகவைத்து தூக்கி எறிவோம்
சிங்க மராட்டியர் தம் மிரட்டல் கொண்டு
ஏழை பிஹாரி கைகால் மாறு கொள்வோம்
சிங்களத் திமிரினுக்கும் பாலமமைப்போம்
சேதுவை உடைத்திடவும் திட்டமிடுவோம்
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்
வருடங்கள் தோறும் உயிர் பறிப்போம்
-------------
கழுதைகளே இன்றைக்கு என்னை மன்னியுங்கள்
-----------
படம் : பாரதி திரைப்படப் பாடல் , இணைய காணொளியில் இருந்து
ஈ.ரா
4 comments:
"அபத்த ஆங்கிலத்தில் பேரங்கள் பேசி"
தனி மனித தாக்குதலை தவிர்ப்பீர். நீங்கள் வேண்டுமானால் ஆங்கில புலவராக இருக்கலாம். ஆனால் அனைவரும் அப்படி அல்ல.
கருத்துக்கு நன்றி netmp,
நான் ஆங்கிலப் புலவனும் அல்ல, தமிழ்ப் புலவனும் அல்ல..
அபத்தம் என்று சொல்லி இருக்கக் கூடாதுதான் மன்னிக்கவும்..
அதே சமயம் விளக்கம்கொடுக்கவோ பதில் அளிக்கவோ மறுத்து ஓடி ஒளிவோம், ஆனால் பேரம் பேச மட்டும் எப்படி இருந்தாலும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவோம்.. நல்ல நியாயம்.
ஹா...ஹா...ஹா....
நல்ல ஆங்கிலம், கெட்ட ஆங்கிலம்.... என்ன அளவுகோல்...
அயோக்கியர்களின் பேரம்னு இருக்கட்டும் ஈ.ரா...
நன்றாக இருக்கிறது, இன்றைய தலைவரின் ஸ்பெஷல் கவிதைக்கு வெய்ட்டிங்!!!!!!!
Post a Comment