Thursday, April 16, 2009

நான் முதல் நாள் பார்த்த முதல் படம்



நான் முதல் நாள் பார்த்த முதல் படம் "தளபதி". தீபாவளி அன்னிக்கு தளபதி பனியனை வாங்கி போட்ட ஒரே ஆள் எங்க ஏரியால நானாத்தான் இருப்பேன் .....

எட்டாவதோ என்னவோ படித்துக் கொண்டு இருந்த எனக்கு எப்படியாவது சீக்கிரம் தளபதியைபார்க்கனும்னு ஆசை.. எங்க வீட்ல தீபாவளி அன்னிக்கு எங்க அம்மாவோட அத்தை வீட்டுக்கு போக சொல்லி எங்க மாமாவோட அனுப்பிச்சாங்க.. தூர்தர்ஷன்ல ராக்கம்மா ஸ்பெஷல் புது பாட்டு போட்டா மிஸ் ஆயிடுமேன்னு வருத்தத்துல இருந்தாலும் பெரியவங்க சொன்னதுக்காக அங்க போனேன்.

அங்க போனா அவுங்க பையன், அப்போ சென்சார் போர்டுல எதோ போஸ்டிங்க்ல இருந்ததால மூணு டிக்கெட் ஸ்பெஷல் ஷோவ்க்கு இருக்குன்னாறு... பழம் நழுவி பால்ல விழுந்த மாதிரி அவசர அவசரமா வூட்லாண்ட்ஸ் சிம்பொனிக்கு ஓடினோம் ...

சரியா படம் ஆரம்பிக்கும்போது போயிட்டோம். எனக்கு தலை கால் புரியல.. ஏற்கனவே வெளிநாட்டில் ரெக்கார்ட் ஆன முதல் பாடல் அப்பிடி இப்பிடின்னு பெரிசா எதிர்பார்த்து இருந்த ராக்கம்மா பாடலுக்கு, நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் கலாசலா டேன்ஸ் ஸ்டெப் வைக்க நான் எங்க மாமாங்களையும் மீறி விசில் அடிக்க ஆரம்பிச்சேன்...

தலைவர் ஒரு கெட்ட போலிசை நடு ரோட்டில வெட்டினப்ப ஷோபனாவை விட கதி கலங்கிட்டேன்... எனக்கு கொடுத்த பாப்கார்னைக்கூட தின்னாம முதல் முறையா ஆன்னு வாயப் பொளந்துட்டு ஸ்க்ரீனையே பார்த்துக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் தலைவர தலைகீழா கட்டி வச்சு அடிக்கும்போது எல்லாம் நொந்தே போயிட்டேன்.. சுந்தரி பாடலுக்கு தலைவரோட கொண்டையும், அந்த வார் கெட்டப்பும் பார்த்து அசந்து போயிட்டேன்.


அரவிந்த்சாமி, டிஎஸ்பி கிட்ட ரஜினி " இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது. அவர் பேசி முடிச்சதும் என்ன கத்தி முடிச்சுட்டீங்களா?ன்னு அ.சாமி கேட்டதும் எல்லோரும் அசிங்கமா திட்ட நானும் ஒரு ரவுசு விட்டேன்.

காட்டுக்குயிலு பாட்டுக்கு செம டான்ஸ்.. வீட்டுக்கு வந்தப்புறம் பாட்டு புக் வாங்கி நானும் என் தம்பியும் ரொம்ப நாள் அந்த பாட்ட யேசுதாஸ் மாதிரி ஒருத்தரும், எஸ்பிபி மாதிரி ஒருத்தரும் பாடி பக்கத்து வீட்டுக் காரங்களை நாராசமாய் நையப் புடைச்சிருக்கோம் .

ஐயோ பாவம் அவன், வீட்ல பட்டாசு வெடிக்கறதுக்காக அத்தை வீட்டுக்கு வராதவன், நான் தளபதி பார்த்துட்டேன்னு ஒரு அணு குண்டைப் போட்டதும் ஆடிப் போயிட்டான்

இவ்விதமாய் என் முதல் நாள் முதல் பட அனுபவம் இனிதே நிறைந்தது.. அதன் பிறகு எல்லா ரஜினி படங்களையுமே முதல் நாளோ அல்லது முன்கூட்டியோ போடப்படும் ஸ்பெஷல் ஷோவிலோ பார்த்துவிடுவேன்.

பாஷா டிவிக்கள்ள பல முறை போட ஆரம்பிச்சப்புறம் தான் நான் தளபதியை டிவியில அடிக்கடி பார்க்குறதை நிறுத்தினேன்..

3 comments:

Raja said...

பிளாஷ்பேக் சூப்பர். தள்பதி எத்தனை தடவை பார்த்தாலும் புதுசா இருக்கும். படம் பார்த்துட்டு கர்ச்சிப்ப தலைவர் மாதிரி கழுத்துல கட்டிக்கிட்டு சுத்துனது ஞாபகம் இருக்கு. மனிதன்,தளபதி ஆடியோ கேசட் ஸ்டில் ரெண்டும் அப்ப பாப்புலர்.

ஈ ரா said...

தங்கள் வருகைக்கு நன்றி ராஜா

கிரி said...

// தூர்தர்ஷன்ல ராக்கம்மா ஸ்பெஷல் புது பாட்டு போட்டா மிஸ் ஆயிடுமேன்னு வருத்தத்துல இருந்தாலும்//

ஆமாமா! அப்பெல்லாம் இது ரொம்ப முக்கியம்..

// நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் தலைவர் கலாசலா டேன்ஸ் ஸ்டெப் வைக்க நான் எங்க மாமாங்களையும் மீறி விசில் அடிக்க ஆரம்பிச்சேன்... //

செம பாட்டு மற்றும் நடனம்

// இப்போ கைவைடா பார்க்கலாம், வைடான்னு சொல்றப்போ தியேட்டர்ல பறந்த விசிலை வர்ணிக்கவே முடியாது//

செம சீன் அது... அடி பட்டய கிளப்பி இருப்பாரு!

//எல்லோரும் அசிங்கமா திட்ட நானும் ஒரு ரவுசு விட்டேன்.//

ஹா ஹா ஹா

ஈரா நாம எல்லோரும் சேர்ந்து எந்திரன் படத்திற்கு போய்டுவோம் ..அடி! தூளு

Post a Comment