Wednesday, July 22, 2009
நான் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து
எனக்காகப் பிறந்தவளே!
எனக்குள்ளே இருப்பவளே!
உனக்கு மட்டும் ஏனடி
இத்தனை பளபளப்பு?
உனக்கு வாழ்த்து சொல்ல ஏனடி
இத்தனை குறுகுறுப்பு?
நீ பிறந்த இந்நாளின்
பிரகாசத்தினால் வருடத்தின்
மற்ற 364 நாட்களும்
மறைக்கப்பட்டு விட்டன!
நான் நினைக்கிறேன் -
உன்னைப் படைத்த அன்று மட்டும்
அந்த பிரம்மன் ஓவர் டைம்
செய்து இருப்பான் என்று!
நீ
பிறந்த நாள் துணி எடுக்க
கடைக்குச் செல்லும்போது
வேண்டாமென்று சொல்லவாவது - நீ
தம்மைத் தொட்டு தூக்க மாட்டாயா என்று
துணிகள் எல்லாமே ஏங்குகின்றன..
நீ
தம் பக்கம் திரும்பப் போவதில்லையே
என்ற ஏக்கத்தில் - தம்
பிறப்பை எண்ணி எண்ணி
நொந்து கொள்கின்றன -
ஜென்ட்ஸ் வாட்சுகள்.....
தாம் தேய்ந்து விட்டால் - உன்
கால்களை விட்டுப் பிரிய வேண்டுமே என்றெண்ணி
தேயாமலே நடக்கின்றன
உன் கால் செருப்புக்கள்!
நீ
வளைஎடுக்க கடைக்குச் செல்லும்போது
உன் கை அளவு சேரா வளையல் எல்லாம்
ஏக்கப் பெருமூச்சுடன்
வெளிநடப்பு செய்கின்றன.....
உனக்கு மெலிதான சங்கிலிதான் பிடிக்குமென்பதால்
தமக்கு சேதாரம் ஆனாலும் பரவாயில்லை என்று
தம்மைத் தாமே தேய்த்துக் கொள்கின்றன -
தடிமனான சங்கிலிகள்.....
இப்படி உயிரற்ற பொருட்கள் கூட
உன்னால் உயிர் பெறும்போது -
உயிருள்ள நான் எம்மாத்திரம்?
என்னால் முடிந்தது -
ஹாப்பி பர்த் டே.......
அன்புடன்
ஈ. ரா
பி. கு.: இது ஏதோஉணர்ச்சி வசப்பட்டு எழுதியது... எனவே இதைப் படித்து விட்டு பந்தா காட்டவோ, பிகு பண்ணவோ வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
அழகான பிறந்தநாள் பரிசு..
நீ பிறந்த இந்நாளின்
பிரகாசத்தினால் வருடத்தின்
மற்ற 364 நாட்களும்
மறைக்கப்பட்டு விட்டன!
Attakasamana parisu......
VIJI
நல்வரவுக்கு நன்றி கார்த்தி மற்றும் விஜி,
//தம் பக்கம் திரும்பப் போவதில்லையே
என்ற ஏக்கத்தில் - தம்
பிறப்பை எண்ணி எண்ணி
நொந்து கொள்கின்றன -
ஜென்ட்ஸ் வாட்சுகள்.....//அட்டகாசம் வாத்தியார்...சூப்பர் பிறந்த நாள் பரிசு....கலக்கு நண்பா
pls. continue
Post a Comment