Friday, August 7, 2009

கான்வென்ட் பிள்ளை - ஒரு தங்கிலிஷ் கவிதை (!)














தலை சீவி
தளுக்காய் பவுடர் வைத்து
ஹை கலர் யுநிபார்ம்மில்
காலர் பட்டன் போட்டு
டை கட்டி
பெல்ட் இறுக்கி
ஷூ மாட்டி
லேஸ் முடித்து
டிபன் பாக்ஸ்யில்
பிரட்டும் வெண்ணையும்
பிச்லரியும் வைத்து
செல்லப் பிள்ளையை
சீருந்தில் ஏற்றி
ஸ்கூலுக்கு அனுப்பினால் -
பையன்
பத்து மணியில் இருந்து
வெளியே முட்டி போட்டானாம்
ஹோம் வொர்க் செய்யவில்லை என்று..!

4 comments:

கார்த்திக் said...

நீள் டவுன் போட்டானாம்-னு இருந்தா நல்லா இருந்துருக்கும் தோழரே..

snkm said...

எப்படிப்பா இப்படி! பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள தூண்டுகிறதே!

ஈ ரா said...

நன்றி கார்த்திக் அண்ட் சங்கரனார்

//நீள் டவுன் போட்டானாம்-னு இருந்தா நல்லா இருந்துருக்கும் தோழரே..//


தாங்கள் கூறுவது மேலும் நன்றாக இருக்கிறது.....

நன்றி...

Anonymous said...

இந்த மாதிரி கவிதைகள் நிறைய எழுதுங்கள் ஈரா...

நாசூக்காக குத்தும் ஊசி மாதிரி... அரசுப் பள்ளிகளை ஒழித்துக் கட்டிய நம் மக்களுக்கு அப்போதாவது உறைக்குதா பார்ப்போம்!

வினோ
என்வழி.காம்

Post a Comment