Thursday, October 8, 2009
திருமணத்திற்குப் பின் நாங்கள் பார்த்த முதல்படம்..
திருமணத்திற்கு முன்னாலேயே நான் சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க எல்லாவற்றையும் நண்பர்களோடு பார்த்து விட்டதால் திருமணத்திற்குப் பின் உருப்படியான ஏதாவது படத்தை முதன் முதலில் பார்க்க வேண்டுமே என்று நினைத்து இருந்திருந்தேன்...நல்ல வேளையாக - உன்னைப் போல் ஒருவன் ரிலீசாகி நான் கவுரவமாக சொல்லிகொள்ளும்படி ஒரு படம் கிடைத்தது...அதற்காக முதலில் கமலஹாசனுக்கு ஒரு நன்றி..இதன் இந்தி மூலப் படத்தை நான் பார்த்து இல்லை எனவே என்னைப்பொறுத்தவரை இது ஒரு புதிய படமாகத் தான் தோன்றியது..
எனது சகோதரனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் ஆயிருந்ததால், நாங்கள் எல்லோரும் சேர்ந்தே தான் முதல் படம் பார்க்கவேண்டும் என்று விரும்பினோம்.. ஒரு வழியாக எல்லோரின் நேரமும் செட்டாகி கடந்த வார இறுதியில் படம் பார்ப்பது முடிவானது... நேரம் குறைவாக இருந்ததால், நகரின் உள்ளேயோ, மாயாஜால் போன்ற புற நகருக்கோ செல்ல முடியவில்லை.. திருவான்மியூர் ஜெயந்தியில் (இங்கே தான் நான் வாரா வாரம் ஏழெட்டு முறை பாஷா பார்த்தேன்.). உ.போ.ஒ. ஓடுவதாக பத்திரிகையில் பார்த்திருந்ததாலும், புதிதாக டிடிஎஸ் பண்ணிஇருப்பது எப்படி இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வத்தாலும் அங்கே சென்றால் - மேற்படி படத்தை எடுத்துவிட்டு, அங்கே போஸ்டரில் என்னைப்போல் ஒருவன்(??)பரத் ஆறுமுகமாக மிரட்டிக் கொண்டு இருந்தார்... எல்லோரிடம் மொக்கை வாங்கி கொண்டு, கணபதிராமில் நுழைந்தோம்... பால்கனி புல் ஆகிவிட்டது.. கீழ்தளத்திற்கு எங்கள் சகோதர சகோதரிகள், இரண்டு நண்பர்கள் உட்பட ஒன்பது பேர் டிக்கெட் எடுத்து நுழைந்தோம்.
படம் ஆரம்பிப்பதற்கு முன் சுருதி ஹாசன் பாடல் ஒன்று வந்தது.. படத்தில் பாடல்கள் இல்லை என்பதால் இந்த ஏற்பாடு போலும்... பாட்டு பரவாயில்லை.. அப்போது என் நண்பர் மெதுவாக என்னிடம் சுருதி அழகாக இருப்பதாகச் சொல்ல, நான் பதிலுக்கு "எனக்கு என் பொண்டாட்டியைத் தவிர யாரும் அழகில்லை " என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல, எங்கள் வரிசையில் ஒரு "ஓ" போட்டார்கள்..
படம் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு வித அமைதி... மோகன் லாலை ஒரு டாக்டர் நடிகர் சந்தித்து பிலிம் காட்டி, மொக்கை வாங்கும் காட்சியில் தியேட்டரில் பலத்த கைதட்டல்..அப்போது எனக்கு என்னவோ எழுந்து நின்று "ஏய்.. சைலன்ஸ்... படம் பார்த்துட்டு இருக்கோம்ல " என்று சொல்லத் தோன்றியது...
கமலகாசன், மோகன்லால் ஆகிய இருவரின் நடிப்பும் போட்டி போட்டு இருந்தது.. மோகன்லால் பல இடங்களில் பளிச்சிட்டிருந்தார்.. கடைசி காட்சி தவிர வேறெங்கும் இருவரும் நேரில் பார்த்து பேசாதது எனக்கு ஏமாற்றமே... தலைமை செயலாளராக லக்ஷ்மி, சரியான பாடி லாங்குவேஜ்.. கலைஞர் குரலில் முதல்வர் பாத்திரம் ..கமல் ஏன் இப்படி செய்திருக்கிறார் என்று பலர் விமர்சனம் செய்தாலும், எனக்கென்னவோ அது பொருத்தமாகவே தோன்றியது..(என்ன பாம் வைக்கிறேன்னு மிரட்டரானா? சரி நீங்களே பேசிடுங்க, நான் பேசினா சரியா வராது; எலக்ஷன்ல எதுவும் பிராப்ளம் வராதே? வசனம் : இரா. முருகன்.. )
மோகன்லால் டிவி காரர்களை திட்டும்போது செய்யும் உபதேசம், கமல் பாம் செய்வது பற்றி அறியும் முறைகளையும், பைகளை எப்படியெல்லாம் அனாமத்தாக வைக்கலாம் என்று விளக்கும்போது, வீணாகிறது.. எனிவே, பார்க்க வேண்டியவர்கள் பார்த்து உஷாரானால் போதும்..
அந்த இரண்டு போலீஸ ஆபீசர்களும் கண்ணிலேயே இருந்தார்கள்..
குஜராத் கேஸ், கோயம்புத்தூர் கேசுக்கு அப்புறம் வந்தது என்பதை மறந்து விட்டார்கள் போலும்..
விறுவிறுப்பான காட்சிகளும், போலீஸ் அதிகாரிகளின் துடிப்பான நடிப்பும் படத்தை மிகவும் ரசிக்க வைத்தது.. ஐ ஐ டி டிராப் அவுட் மாணவன் காட்சி சிறிதாக இருந்தாலும் சிரிக்க வைத்தது..
அந்த இந்து தீவிரவாதிக்கு, கரம்சந்த் என்ற பெயரை வைத்து இருந்தது வருந்தச் செய்தது...
ஒரு துயரமான சம்பவத்தை சொல்லி கமல் கண் கலங்கும் காட்சியில் கனமான வசனம் இல்லாதது ஒரு பெரும் குறை.. தேவர் மகன் சிவாஜியுடனான காட்சிகள், தெனாலியில் தன்னுடைய திருமணம் நின்றது மற்றும் தாயை இழந்தது போன்ற காட்சிகளில் மிகவும் ஒன்றி நடித்து இருந்த அவருக்கு இந்த காட்சி சரியான முறையில் இல்லையோ என்று தோன்றியது...
அப்புறம், கமிஷனர் யார் என்றே தெரியாது என்பது போன்ற ஒரு பார்வையை கமல் வெளிப்படுத்தி, பின் அவரது வேனை வைத்து அடையாளம் காண்பது சரியாகப் படவில்லை...
இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் இருந்தாலும், திரைக்கதையும், கமல் - மோகன் லால் மற்றும் அனைத்து நடிகர்களின் திறமையாலும் படம் விறுவிறுப்பாகச் சென்றது..
கமலின் இளமைக்கு தான் என்ன ரகசியம் என்று தெரியவில்லை... மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் - எங்களை ரசிக்க வைத்தது .சிந்திக்கவும் வைத்தது...
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
ஆஹா! திருமணம் ஆகி பார்த்த ரஜினி ரசிகரின் படம் ஒரு கமல் படம் ..சூப்பர் :-)
ஈரா படத்தை விட அனைவரும் சென்று என்ஜாய் செய்தது உங்களுக்கு இன்னும் சந்தோசமாக இருந்து இருக்கும்.
இந்த சந்தோசம் என்றும் நிலைக்க என் அன்பான வாழ்த்துக்கள்
// ஆஹா! திருமணம் ஆகி பார்த்த ரஜினி ரசிகரின் படம் ஒரு கமல் படம் ..சூப்பர் :-)//
நான் எந்த கமல் படத்தையும் மிஸ் பண்ண மாட்டேன்.. இன்றைக்கும் குருதிப்புனல் தேவர்மகன், தெனாலி, பஞ்ச தந்திரம், அன்பே சிவம், முதல் பாதி மகாநதி, முதல் இருபது நிமிட தசாவதாரம், தெனாலி, பம்மல் ஆ சம்பந்தம் எத்தனை முறை வேண்டுமானாலும் அசராமல் பார்ப்பேன்..
//ஈரா படத்தை விட அனைவரும் சென்று என்ஜாய் செய்தது உங்களுக்கு இன்னும் சந்தோசமாக இருந்து இருக்கும்.//
நிச்சயமாக..
//இந்த சந்தோசம் என்றும் நிலைக்க என் அன்பான வாழ்த்துக்கள்//
நன்றி கிரி...
படத்தை நீங்கள் ரசித்ததை விட, உலகில் யார் ரொம்ப அழகு என நீங்கள் சொன்னதை ரொம்பவே ரசித்தேன்:))! நல்வாழ்த்துக்கள்!
//படத்தை நீங்கள் ரசித்ததை விட, உலகில் யார் ரொம்ப அழகு என நீங்கள் சொன்னதை ரொம்பவே ரசித்தேன்:))! நல்வாழ்த்துக்கள்!//
தொடர் வருகைக்கு நன்றி சகோதரி..
ராமா,
நீண்ட நாளைக்குப் பிறகு ப்ளாக் பக்கம் வருகிறேன். வீட்டில் அனைவரும் சென்று இந்த திரைப்படம் பார்த்தது மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்திருக்குமென நினைக்கிறேன். அருமையான எழுத்து நடை. மேலும் இதன் ஹிந்தி மூலம் மிகவும் அருமை. நான் சமீபத்தில் தான் பார்த்தேன் (எல்லாம் சப்டைட்டில் உதவியுடன் தான்!). இந்த படம் இன்னும் பார்க்கவில்லை (நல்ல டிவிடி ரிப் கிடைக்கல ):..) ALL THE BEST.
ஈ..ரா... அவர்களே...
தங்கள் அனுபவம் கலந்த இந்த உ.போ.ஒ.விமர்சனம் சூப்பர்... அதுவும் கிரி சொன்னது மாதிரி, தீவிர ரஜினி ரசிகரான உங்களை கலைஞானி கமல் அவர்கள் தியேட்டர் பக்கம் இழுத்தது பாராட்டத்தக்கது...
படம் நன்றாக அனுபவித்து பார்த்து நீண்ட விமர்சனம் எழுதியது பாராட்டத்தக்கது... அதுவும் அந்த "அழகு" கமெண்ட் பளீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...
//
கமலின் இளமைக்கு தான் என்ன ரகசியம் என்று தெரியவில்லை... மொத்தத்தில் உன்னைப் போல் ஒருவன் - எங்களை ரசிக்க வைத்தது.. //
கமலின் இளமை ரகசியத்தை கேட்டு சொல்லி விடுவோம்... நாம் எல்லாரும் கூட மனதில் இளமையானவர்கள் தானே தலைவா...
உ.போ.ஒ..பெரும்பான்மையோரை ரசிக்க வைத்திருக்கிறது... சில எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்பவர்களை தவிர....
தங்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்...
//இந்த படம் இன்னும் பார்க்கவில்லை (நல்ல டிவிடி ரிப் கிடைக்கல )//
உங்கள் நாட்டில் ரிலீஸ் இல்லையா?
//நாம் எல்லாரும் கூட மனதில் இளமையானவர்கள் தானே தலைவா.../
//தங்களின் வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்க அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்...//
நன்றி கோபிஜி
Post a Comment