Sunday, October 11, 2009
தினமலர் - திரைத்துறை மோதல் - ரஜினி பேச்சு..
தினமலர் - நடிகைகள் விவகாரத்தில் ரஜினி பேசிய விவகாரத்தில் லேசாக புகைய வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை.. அப்படியும் லேசான முனகல்களை சிலர் வெளியிடத்தான் செய்தார்கள்.. ரெண்டு வேளை சோத்துக்கு விபசாரம் செய்வதை நியாயப் படுத்தலாமா ரஜினி? என்று ஐயங்கள் எழுந்தன.. ரஜினியைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது புரிந்து விடும்.. புரியவில்லை என்றாலும், அவர் நல்லதைத்தான் சொல்லிஇருப்பார்.. அது இப்போ நமக்கு புரியாது என்று அதை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும் உண்டு...
எந்த ஒரு பிரச்சினைக்குமே ஒரு முடிவு என்பது இருக்கிறது.. நடிகர் ரஜினிகாந்தைப் பொறுத்தவரை பலகாலமாக அவரோ அல்லது அவது பேச்சோ தான் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு முடிவாக இருக்கும்… ஆம், அந்த மனிதன் வரும்வரை ஏதாவது ஒரு பிரச்சினை விஸ்வரூபமாக இருக்கும்; அந்த மனிதன் வந்து உள்ளொன்று வைத்து உதடொன்று உச்சரிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டுப் போக, அந்த மூலப் பிரச்சினை அப்படியே மூழ்கடிக்கப்பட்டு, அதன் பக்க விளைவுகள் பக்காவாக அவரை நோக்கி திசை திருப்பப்படும்..
இது ரஜினிக்கு ஒன்றும் புதிதல்ல.. காவேரி பிரச்சினையா - அதன் மூலம் எங்கே என்று யாருக்கும் தெரியாது, அதன் முடிவோ எப்பொழுது வரும் என்றும் யாருக்கும் தெரியாது - ஆனால் சந்தடி சாக்கில் ஒரு மாதம் சீசனுக்கு ‘கன்னடக்கார ரஜினி’ என்று பட்டி தொட்டி எல்லாம் முழங்கினால் ஒட்டு மொத்தமாக எதிர்ப்புக்களை அவர் பக்கம் அனுப்பி விடலாம்.. ஊடகங்களுக்கும் திடீர் மொழிப் பற்றாளர்களுக்கும், விளம்பரப் பிரியர்களான அவரது சக கலைஞர்களுக்கும் கூட இதில் ஒரு குரூர திருப்தி கிடைக்கும். பிறகென்ன உச்ச நீதிமன்றமாவது, நடுவண் அரசாவது, வெங்காயம்..
ஹொக்கெநக்கல் பிரச்சினை தீருமா தீராதா என்பது பற்றி யாருக்கும் அக்கறை கிடையாது - ஆனால் ரஜினி உதைக்கனும்னு சொன்னதை பற்றி ஆராய்ச்சி கட்டுரைகளே வெளி வரும் அளவுக்கு பலருக்கு எழுத்தார்வம் விண்ணை முட்டும்.
அதே போலத்தான் - சமீபத்தில் நடந்த தினமலர் - நடிகைகள் விவகாரமும்.. இந்த முறையும் தன் மனதில் பட்ட சமூக அக்கறையையும், , பத்திரிகைகளின் தரம் குறித்த தன்னுடைய நியாயமான ஆதங்கத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார். தன்னை பத்திரிகைகளுக்கு எதிராக சித்தரிப்பது நடைபெறும் என்று தெரிந்தும் துணிந்தே நடுநிலையாகப் பேசினார்..
தினமலர் மீது ஏற்கனவே பலருக்கு காண்டு இருந்ததாலும், இது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே, நாம் ஏதாவது சொன்னால் பூமராங்காகிவிடுமே என்ற பயத்தினாலும் நல்லகாலமாக இந்த முறை அந்த அளவிற்குப் பெரிதாக ஏதும் நிகழவில்லை..ஒருவேளை அவரது திரைப்படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ..
பொதுவாக பாலியல் தொழில் என்பது விருப்பப்பட்டு வருவது இல்லை… பிறரது விருப்பத்திற்காக பெண்கள் பலி வாங்கப்படுவதே நடக்கிறது… அந்த அர்த்தத்தில்தான் பரிதாபப் பட்டு ரஜினி “சோத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே ” என்று ஆதங்கப்பட்டார்… இந்த ஆதங்கம், பெண்ணின் சதையை மீறி உள்ளத்தை காணும் உண்மையான மனிதர்களின் ஆதங்கமும் கூட..
தற்காலத்தில் யாரும் தவறான உறவுகளையும், பாலியல் தொழிலையும் பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து நினைப்பது இல்லை - நேரடியாக அவர்களைப் பாதிக்கும் வரை !
எயிட்ஸ் விழிப்புணர்வு அமைப்பினர் கூட, பாதுகாப்பாக உறவு கொள் என்றுதான் சொல்கிறார்களே தவிர தகாத உறவைக்கொள்ளாதே என்று ஆணித்தரமாகக் கூறுவது இல்லை…. ஆக எல்லா மட்டத்திலும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி, இந்த சமூக அவலத்தை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே பெண்களை போகப் பொருளாக்கும் நிலை மாறும்..
முன்னெல்லாம் பெண்கள் ஆண்களுடன் அதிகமாக இணைந்து பணி புரியாத சூழல் நிறைந்த சமூகத்தில் நடிகைகள் என்றாலே ஒரு தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் பழக்கம் இருந்து வந்தது.. அதனால் பல வதந்திகள் காது மூக்கு வைத்து காற்றை விட வேகமாக பரப்பப்பட்டன.. ஒரு வேளை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்றெல்லாம் பொதுஜனத்தை கற்பனையில் மிதக்க வைத்து சப்புக் கொட்டி விற்பனையை அதிகரிக்க வைக்கும் கிசுகிசுக்களை தரமானவை என்று பெயர் எடுத்த பத்திரிகைகள் கூட பிரசுரிக்கத் தொடங்கி நான்காம் தூணான தங்களின் அஸ்திவாரத்தை தாங்களே சுரண்டத் தொடங்கி விட்டன.
தவறு செய்தவர்கள் நடிகையாக இருந்தாலும், நடிகராக இருந்தாலும் அல்லது வேறு யாராகவேனும் இருந்தாலும், ஆதாரம் இருந்தால் வெளியிடுவது பத்திரிகைகளின் புலனாய்வையும் நம்பகத்தன்மையும் பிரதிபலிக்கும்.. ஆனால் மேஜையில் உட்கார்ந்து கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இஷ்டம் போல் எழுதினால், படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.. இந்த முறை மடியில் கனமில்லை மோதிப் பார்த்து விடலாம் என்று ஹோதாவில் இறங்கி விட்டார்கள் நடிகைகள்.. அவர்களுக்கு இன்னும் மகளிர் அமைப்புகளிடம் இருந்தோ சமூக ஆர்வலர்களிடம் இருந்தோ ஆதரவு கிடைக்கும் முன்பாகவே, சக கலைஞன் என்ற முறையிலும் சகோதரன் என்ற முறையிலும் முன்வந்து தன் கருத்தை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார் ரஜினி..
ஒரு கொலைகாரனின் படத்தைப் போட்டால் மற்றவர்கள் உஷாராவர்கள்.. பிக்பாட்டின் படத்தைப் போட்டாலும் அவனை விட்டு ஒதுங்குவார்கள்.. ஆனால் விபசாரம் செய்தவரின் படத்தைப் போட்டால், அவரே திருந்தவேண்டும் என்று நினைத்தாலும் நெருங்கி தொல்லை கொடுப்பார்கள் பல பேர்.. ஆக இந்த குற்றத்தை மட்டும், தொடரச் செய்வது இன்னொருவரின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.. எனவேதான் அவர்களின் படம் வெளியிடப்பட்டால் அது மேலும் அக்குற்றத்தை தூண்டச் செய்யும் எனவே தவறு செய்தவர்களுக்கு படம் போடாமல் சட்ட ரீதியான தண்டனைகளை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்...
அவர் ஆதாரத்துடன் சிக்கிய நடிகை புவநேஸ்வரியைப் பற்றி எதுவும் பேசவில்லை, அவருக்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை.. என்றைக்குமே சட்டத்தின் நிகழ்வுகளில் அவர் தலையிடுவதே இல்லை.. ஆதாரம் இல்லாமல் படத்துடன் நடிகைகளைப் பற்றி செய்தி வெளியிட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்தவே ரஜினி ஆவேசமாகப் பேசியிருக்கிறார்… தன்னைப் பற்றி எத்தனையோ செய்திகள் வந்த போதும் அவற்றை மவுனமாக புறந்தள்ளும் ரஜினியால், தன் சக நடிகைகளைப் பற்றி அவதூறு பரப்பப் படும்போது அதை சகித்துக்கொள்ள முடியவில்லை…. கல்யாண வீட்டுக்குப் போகாவிட்டால் கூட இழவு வீட்டுக்குப் போயிடு என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்… அதற்க்கு அர்த்தம் என்ன வென்றால் நீ மகிழ்ச்சியில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை - உன்னை சார்ந்தவனின் சங்கடத்திற்கு தோள் கொடு என்பது தான்…
இது ரஜினிக்கு நன்றாகத் தெரியும்.. தன்னுடையை சங்கடத்தை தன் சட்டையைப் போல் தான் மட்டுமே மாட்டிக் கொள்ளும் அவர், தன் சகாக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தானே ஒரு போர்வையாகி விடுகிறார்….
அந்த அளவிலே அவருக்கு ஒரு பாராட்டு...
என்ன அந்த மேடையில் பல பேர் வழக்கம் போல் வரம்பு மீறி..வசை பாடி தங்களுக்கு கிடைத்து இருக்கவேண்டிய மரியாதையையும், அனுதாபத்தையும் தானே கெடுத்துக் கொண்டு விட்டார்கள்...இதையும் அவர் ஒரு அறிவுரையாக அவர்களுக்குக் கூறியிருக்கலாம்....
இன்றைய தேதியில், திரைத்துறையும் - பத்திரிக்கையும் அவர்கள் சம்பந்தப்பட்ட வியாபாரங்களின் இரண்டு கண்கள்.. ஆனால் இரண்டுக்கும் கேடராக்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும்...இரண்டின் வாசகர்கள் தான் அனுசரிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு துணிந்து புரையை எடுக்க வேண்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
//ரஜினி பேசிய விவகாரத்தில் லேசாக புகைய வைக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை..//
இல்லை ஜி... வழக்கம் போலவே, அவரை கிழித்து காயப்போட்டு, காயப்படுத்தி விட்டார்கள்...
//ரஜினியைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பது புரிந்து விடும்.. //
அவரை நன்கு அறிந்தவர்கள் அவர் என்ன சொன்னார் என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்... ஆனால், எதுவுமே தெரியாதது போல நடிக்கும் "எல்லாம் தெரிந்த ஏழுமலை"கள் தான் அவரை பற்றி அவதூறாக பேசுகிறார்கள்...
//ஒரு பிரச்சினை விஸ்வரூபமாக இருக்கும்; அந்த மனிதன் வந்து உள்ளொன்று வைத்து உதடொன்று உச்சரிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிட்டுப் போக, அந்த மூலப் பிரச்சினை அப்படியே மூழ்கடிக்கப்பட்டு, அதன் பக்க விளைவுகள் பக்காவாக அவரை நோக்கி திசை திருப்பப்படும்..//
இது தான் காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று ஜி... அவர் பேசினாலும் குற்றம்... பேசாவிட்டால், ஏன் இதற்காக பேசவில்லை என்று கேட்க ஒரு பெரிய கூட்டம் கூடும்...
//சந்தடி சாக்கில் ஒரு மாதம் சீசனுக்கு ‘கன்னடக்கார ரஜினி’ என்று பட்டி தொட்டி எல்லாம் முழங்கினால் ஒட்டு மொத்தமாக எதிர்ப்புக்களை அவர் பக்கம் அனுப்பி விடலாம்.//
காவிரி பிரச்சனையிலும், ஹொக்கேனக்கல் பிரச்சனையிலும் ரஜினியின் தலை உருண்டதை எனக்கு இப்போது நினைத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ஆட்சியில் இருக்கும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் அந்த திட்டத்தையே கிடப்பில் போட்டுள்ளனரே... ரஜினியை வரிந்து கட்டிக்கொண்டு கேள்வி கேட்கும் கூட்டம் இப்போது, கிடப்பில் போட்டுள்ள அரசியல்வாதியை எதிர்த்து ஒரு கேள்வியாவது கேட்குமா... கேட்டால் உடலில் உயிர் மிஞ்சுமா?? எங்க போய் சொல்றது இந்த கொடுமையை? இவர்களை தான் முன்பு சொன்னேன் "எல்லாம் தெரிந்த ஏழுமலை"கள்னு..
//இந்த முறையும் தன் மனதில் பட்ட சமூக அக்கறையையும், , பத்திரிகைகளின் தரம் குறித்த தன்னுடைய நியாயமான ஆதங்கத்தையும் இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து நேர்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.//
ரஜினி இவ்வாறு தொடர்ந்து செய்வதில் எனக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை ஜி... நல்லவர்கள் நல்லவற்றை பற்றி எப்போதும் சிந்தனையில் இருப்பர்...
//திரைப்படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ..//
வாய்ச்சொல் வீரர்கள்... மனதளவில் கோழைகள்... அதுவும் இந்த முறை நடக்காது... ஏனென்றால் இது "சன் டி.வி."யின் நேரடி தயாரிப்பு...
//அந்த அர்த்தத்தில்தான் பரிதாபப் பட்டு ரஜினி “சோத்துக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறார்களே ” என்று ஆதங்கப்பட்டார்…//
என் கூற்றும் இதுதான் ஈ..ரா...
//எல்லா மட்டத்திலும் கடுமையான தண்டனைகளை ஏற்படுத்தி, இந்த சமூக அவலத்தை முற்றிலுமாக நிறுத்தினால் மட்டுமே பெண்களை போகப் பொருளாக்கும் நிலை மாறும்..//
இது கனவில் கூட சாத்தியமாகாது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியும்...
//படிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது… செய்தியில் சம்பந்தப் பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும்.. //
மிக சரி... ஆனால், இப்போது ஜர்னலிஸம்ல இதுதானே நடக்குது...
//இந்த குற்றத்தை மட்டும், தொடரச் செய்வது இன்னொருவரின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.. எனவேதான் அவர்களின் படம் வெளியிடப்பட்டால் அது மேலும் அக்குற்றத்தை தூண்டச் செய்யும் //
படம் போடவில்லையென்றால் கூட இவர்களுக்கு, ஆட்சியாளர்கள், போலீஸ் துறை மற்றும் பெரிய ஆட்களிடம் இருந்து தொடர்ந்து தொந்தரவு வரவே செய்யும்... எவ்ளோ பேரு ஜி....யோக்கியன் ??
//நீ மகிழ்ச்சியில் பங்கெடுக்காவிட்டாலும் பரவாயில்லை - உன்னை சார்ந்தவனின் சங்கடத்திற்கு தோள் கொடு என்பது தான்…//
ரஜினியை பற்றியும், அவரின் நல்ல உள்ளத்தையும் அனைவரும் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை...
//தன்னுடையை சங்கடத்தை தன் சட்டையைப் போல் தான் மட்டுமே மாட்டிக் கொள்ளும் அவர், தன் சகாக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தானே ஒரு போர்வையாகி விடுகிறார்….//
மிக மிக பிரமாதமான விளக்கம் ஈ..ரா..அவர்களே... இதை விட ரஜினியின் செய்கையை யாரும் அழகாக விளக்க முடியாது... இதனால் தான் நண்பர் அருண் கூட ரஜினியை பற்றி எழுதும்போது "மனிதருள் மாணிக்கம்" என்று எழுதினார்...
//திரைத்துறையும் - பத்திரிக்கையும் அவர்கள் சம்பந்தப்பட்ட வியாபாரங்களின் இரண்டு கண்கள்.. என்ன இரண்டுக்கும் கேடராக்ட் ஆபரேஷன் பண்ண வேண்டும்...இரண்டின் வாசகர்கள் தான் அனுசரிக்கும் மனப்பான்மையை விட்டுவிட்டு துணிந்து புரையை எடுக்க வேண்டும்..//
நாம ஊதற சங்கை ஊதிக்கொண்டு தான் இருக்கிறோம்... பார்ப்போம், என்ன நடக்கிறதென்று...
வாழ்த்துக்கள் ஈ.ரா...
(நண்பர் லாரன்ஸ் பிரபாகர் அவர்களின் கமெண்ட் நான் போஸ்ட் செய்கிறேன்...)
நல்லா இருக்குதுங்க.
தங்களுக்கு மின்னஞ்சல் எழுதனும்னு ரொம்ப நாளா நினைச்சுக் கிட்டு இருக்கேன். கோபியும் அடிக்கடி உங்கள பத்தி சொல்லுவார். சாரி தாமதாயிருச்சு.
தங்களது கந்த குரு கவசம் வாசகம் முகப்பில் படித்ததுமே, ஆ நம்ம மாதிரியே இவருக்கும் இது பிடிச்சுருக்கே என வியந்தேன்.அன்பே கந்தன், அன்பே நீயும், அன்பே நானும்.... . எனும் அந்த வாக்கு தொடர் மிகவும் ஆழமானது, அர்த்தம் உள்ளது. கலக்குங்க.
தங்களது ரஜினி பேச்சு பற்றிய பதிவும் இப்போ படிச்சேன். சரியான பாயிண்டு. வாழ்த்துக்கள். நல்லா எழுதுங்க.
சமீபத்தில் தான் மணம் செய்ததாய் குறிப்பிட்டு இருந்தீர்கள். நிறைவான, மகிழ்ச்சியான மண வாழ்விற்கு வாழ்த்துகிறேன்.
வெறும் விமர்சனமாய் இல்லாமல், ஒரு பிரெண்ட் கிட்ட சொல்ற மாதிரி சொன்ன அணுகு முறை நல்ல முயற்சி. பாருங்களேன் விமர்சனம் என்ற பெயரில் கடிச்சு குதறினா, பிரபலம் ஆகலாம்னு தப்பு கணக்கு போடும் சில மாற்று ஏமாற்று பேர்வழிகள் மத்தியில் நடுனிலையான தங்கள் எழுத்து சூப்பர். நான் இதை ரசித்தேன் ,இதை ரசிக்கவில்லை என்று இட்டதற்கு பாராட்டுக்கள்.
ஒரு சின்ன சேதி.
உச்சக் காட்சியில் அதாவது கமலும் மோகன்லாலும் சந்தித்து கொள்ளும் நேரத்தில் இருவருக்கும் இருவரை பற்றி தெரியும். ஆனால் தெரியாதது போல் பேசுவார்கள்.
சற்று ஆழமாய் கவனித்தால், சிவ பூஜையில் கரடி போல சரியான அந்த சந்தர்ப்பத்தில் மனைவியின் போன் வரும்.
'இரும்மா பேசிட்டு இருக்கேன்' இது கமல்
'யாரு பிரெண்டா ??? ' இது மனைவி
'இல்ல தெரியல, பேசுனாத் தெரியும்' இது நக்கலோடு.
'நான் வேணா வீட்டுல டிராப் பண்ணவா' இது லால் நக்கலாய்
அப்போது தான் பார்ப்பது போல் உத்து பார்த்து விட்டு 'ஓ போலீஸ்ல வேலை செய்றீங்களா' இது கமல்.
அப்போ லாலின் ரீயாக்ஷன் அழுத்தமாகவும் அமைதியாகவும் இருக்கும்.
நானும் உ.போ.ஒ. வுக்கு எழுதியிருக்கிறேன். நேரம் அனுமதித்தால் படியுங்களேன்.
http://padukali.blogspot.com/2009/09/blog-post_24.html
நன்றி கோபிஜி
//இல்லை ஜி... வழக்கம் போலவே, அவரை கிழித்து காயப்போட்டு, காயப்படுத்தி விட்டார்கள்.../
ஆனால் இந்த முறை, பொது ஜனங்களில் நிறைய பேர் பாசிடிவாக பேசியதை நான் கேட்டேன்..
//படம் போடவில்லையென்றால் கூட இவர்களுக்கு, ஆட்சியாளர்கள், போலீஸ் துறை மற்றும் பெரிய ஆட்களிடம் இருந்து தொடர்ந்து தொந்தரவு வரவே செய்யும்... எவ்ளோ பேரு ஜி....யோக்கியன் ??//
ஜி தலைவர் படம் போடாதீர்கள் என்று சொன்னது - பிரபலங்களுக்கு மட்டும் அல்ல உண்மையிலேயே வழக்குகளில் மாட்டும் பெண்களுக்கும் தான்
Brilliant analysis Ee.Raa.
Those who criticise Rajini will continue to criticise him because they are jealous of his achievements and his popularity. So, no point in bothering about such biased opinion.
//நல்லகாலமாக இந்த முறை அந்த அளவிற்குப் பெரிதாக ஏதும் நிகழவில்லை..ஒருவேளை அவரது திரைப்படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ..//
But, if they do it for his next movie Yendhiran, Sun Group will take care of that:) Oh God! what an irony - they were the one who spoiled the good opening of Rajini 's last movie Kuselan. Hmm.. That proves Rajini's popularity & the emptiness in Sun's anti-Kuselan propaganda.
//ஒரு கொலைகாரனின் படத்தைப் போட்டால் மற்றவர்கள் உஷாராவர்கள்.. பிக்பாட்டின் படத்தைப் போட்டாலும் அவனை விட்டு ஒதுங்குவார்கள்.. ஆனால் விபசாரம் செய்தவரின் படத்தைப் போட்டால், அவரே திருந்தவேண்டும் என்று நினைத்தாலும் நெருங்கி தொல்லை கொடுப்பார்கள் பல பேர்.. ஆக இந்த குற்றத்தை மட்டும், தொடரச் செய்வது இன்னொருவரின் பங்களிப்பாகத் தான் இருக்கும்.. எனவேதான் அவர்களின் படம் வெளியிடப்பட்டால் அது மேலும் அக்குற்றத்தை தூண்டச் செய்யும் எனவே தவறு செய்தவர்களுக்கு படம் போடாமல் சட்ட ரீதியான தண்டனைகளை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்...//
A very different angle from you and very well said.
Overall, a very good post and analysis of the issue.
Keep it up.
தங்கள் பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி லாரன்ஸ் பிரபாகர்..
கோபிஜிக்கும் நன்றி..
எனது மின்னஞ்சல் இதுதான்..
e.ramsrams@gmail.com
நீங்கள் கூறியிருக்கும் உச்சக் காட்சி சரியானதுதான். நான்தான் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்..
தங்கள் விமர்சனத்தைப் பார்த்தேன்..கோபிஜியின் பின்னூட்டத்தையும் பார்த்தேன்.. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் இருவரும்...
Thanks Arun ji...
வேலைப்பளு குறைந்தவுடன் மீண்டும் எழுத ஆரம்பியுங்கள்..புதிய பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்...
Eera, thanks for using a photo from our website.
As usual excellent observation and write-up.
I also equally enjoyed the comments.
- Sundar
Onlysuperstar.com
ஏங்க ரஜீனி என்ன விசுவாமித்திரரா..? அவருமட்டும் இதைப்பற்றி வேற என்ன சொல்லுவாரு???
நடிகர் சங்கத்தை அவர் பகைத்துக்கொள்ள அவருக்கு என்ன பைத்தியமா???
ஈரா நான் கூற நினைத்ததை கோபியே வரிக்கு வரி கூறி விட்டார்.
ஈரா நீங்கள் நினைப்பது போல இது எளிதாக முடிந்து விடாது..ரஜினியை குசேலன் அளவிற்கு இல்லாமல் இதிலும் ஓரளவு சிக்க வைத்து விடுவார்கள்..
ரசிகர்கள் வேண்டும் என்றால் புரிந்து கொள்ளலாம் ஆனால் மற்றவர்கள் இதை புரிந்து கொள்ள முயற்சிக்க மாட்டார்கள். இதையே "சிலர்" கிளப்பி மாற்றி விடுவார்கள்.
காலம் தான் எல்லாத்துக்கும் மாற்று.
அடுத்ததாக ஒரு "பிரச்னையை" விரைவில் எதிர்பார்க்கிறேன்..
முதலில் உங்கள் கரம் பற்றி கட்டியணைத்து நன்றி ஈ.ரா.
சினிமா விமர்சனம், அரசியல், இலங்கை தமிழ் பிரஞ்சனை போல, விளம்பர வியாபாரமாகி போய்விட்ட விசையத்தை பற்றி எழுத கூடாது, என்பது என் கொள்கை ஆனாலும்,
இந்த முறை,
தம் இருந்தால் அவளுடன் படுத்தவனையும் படம் பிடித்து போடு என்ற வார்த்தையை மறைத்து விட்டு, விபச்சாரத்துக்கு துணை போகும் ரஜினி என்று எழுதியதை பார்த்த போது,
என்ன இழவு இது? நான் பிரபல பதிவர் இல்லை என்றாலும் இதை பற்றி எழுதிய சொங்கிகளை எழுதி கிழித்து விட வேண்டும் என்று எழுத நினைத்ததில் நீங்கள் முந்திக்கொன்டீர்கள்.
//அவர் பேசினாலும் குற்றம்... பேசாவிட்டாலும் குற்றம் //
//சீசனுக்கு ‘கன்னடக்கார ரஜினி’ என்று //
//நல்லவர்கள் நல்லவற்றை பற்றி எப்போதும் சிந்தனையில் இருப்பர்//
முழுக்க முழுக்க உண்மை. அவரை உரசி விளம்பரம் தேடி, அதில் வயிறு நிறைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு இது புரியாது.
ஆனால், கிழித்து காயப்போட அவர் ஒன்றும் ஈரதுணியல்ல....
வானம்...எந்தனை மழை இடி வந்தாலும் அதை காயப்படுத்த முடியாது, விளம்பர பிழைப்புக்காக எந்தனை நாய் குறைதாலும் அந்த ஜோதி மங்கிட போவதில்லை.
கோவத்துக்கு மனிக்கவும்.
நன்றி.
//சுந்தர் ஜி
உங்க பிசி செட்யூளுக்கு மத்தியில் இங்கு வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் - தலைவர் படத்தை நம்ம சைட்டுல இருந்து எடுக்க அனுமதிததுக்கு.
//ஏங்க ரஜீனி என்ன விசுவாமித்திரரா..? அவருமட்டும் இதைப்பற்றி வேற என்ன சொல்லுவாரு???
நடிகர் சங்கத்தை அவர் பகைத்துக்கொள்ள அவருக்கு என்ன பைத்தியமா???//
முதல் வருகைக்கு நன்றி நாஞ்சில் பிரதாப் சார்,
ரஜினிக்கு ராஜரிஷி பட்டம் கொடுத்ததால் அப்படி கேட்கிறீர்களோ ??? அப்புறம் நடிகர் சங்கத்தை அவர் பகைத்துக்கொண்டதே இல்லையா? சிங்கிளா உண்ணாவிரதம் இருந்து அவர்கள் தவறை சுட்டிக்காட்டியதை மறந்து விட்டீர்களா?
//ஈரா நீங்கள் நினைப்பது போல இது எளிதாக முடிந்து விடாது..ரஜினியை குசேலன் அளவிற்கு இல்லாமல் இதிலும் ஓரளவு சிக்க வைத்து விடுவார்கள்..//
கிரி சார் எவ்வளவோ பார்த்துட்டோம் இதையும் பார்க்க மாட்டோமா ?
//அடுத்ததாக ஒரு "பிரச்னையை" விரைவில் எதிர்பார்க்கிறேன்..//
நல்லா கிளப்புறீங்க ஜி பீதியை..
//முழுக்க முழுக்க உண்மை. அவரை உரசி விளம்பரம் தேடி, அதில் வயிறு நிறைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு இது புரியாது.
ஆனால், கிழித்து காயப்போட அவர் ஒன்றும் ஈரதுணியல்ல....
வானம்...எந்தனை மழை இடி வந்தாலும் அதை காயப்படுத்த முடியாது, விளம்பர பிழைப்புக்காக எந்தனை நாய் குறைதாலும் அந்த ஜோதி மங்கிட போவதில்லை.
கோவத்துக்கு மனிக்கவும்.//
நீங்க கோபத்துல இருக்கீங்கன்னு தெரியுது... ரொம்ப கோபத்துலன்னு நினைக்கிறேன்..
நீங்கள் பிரபல பதிவர்தான் ஐயா... உங்கள் சித்தர்கள் பற்றிய பதிவை ரசித்து படித்தேன்..
i have seen somany blogs which are misunderstood the rajini talk.i thing you have given right account of rajini talks.congrats to your unbiased report.keep it up.
Mr. E Ra... the article as well as the comments and resposnes were good. Especially the reply to nanjil pratap.. that "has Thalaivar never took upon the nadigar sangam alone". You have said whatever I had in my mind. But I am always trying to have it crisp n short as I do not write it as a blog, but as a comment in onlysuperstar.com. Good to see so many people taking care n time to analyze things happening around. Keep up the good work.
மிக அருமை ஈ ரா சார் அவர்களே. மிக கூர்மையாக உள்ளது உங்கள் கருத்து . நீங்கள் மற்றும் சுந்தர்ஜியை போன்ற ரஜினி ரசிகர்களால் நம் தலைவருக்கே பெருமை . உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை . வாழ்க உங்கள் சேவை ..
rajini will rule tamil nadu
vasi.rajni
Thanks Veejay and Vasi,
திரு ஈ.ரா. அவர்களே, உங்களின் பின்னூட்டங்களை பிற தளங்களில் பார்த்திருக்கிறேன். உங்களின் இந்த பதிவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியும் பாராட்டும். உண்மையான வரிகள். நமக்கு ரஜினியை ரொம்ப பிடிப்பதால் இந்த மாதிரியான விஷயங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை. அவர்களின் மேல் கோபம் வருகிறது, ஆனால் ரஜினி? இப்போது தூற்றுபவர்களே நாளை அவரை தேடிப் போனால், அவரது உள்ளத்தில் கொஞ்சம் கூட வஞ்சகம் இல்லாமல் பேசுவார். அவரைப் புரிந்துகொள்வது ரொம்ப எளிது, பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் புரியாத மாதிரிதான் அவர்கள் இருப்பார்கள். கலியுகமாயிற்றே. இதில் உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு அளப்பரியது. மீண்டும் இந்த பதிவிற்காக நன்றி.
Post a Comment