Thursday, October 15, 2009

முயற்சி செய்


முயற்சி செய்
ஏனெனில்

முயற்சி
முன்னேற்றத்தின்
முதல் படி!
பிரகாசமான
வாழ்விற்குப்
பிள்ளையார் சுழி!

முயற்சி
குறிக்கோளின்
கூட்டாளி!
உனக்காகக்
குரல் கொடுக்கும்
பங்காளி!

முயற்சி
அதிர்ஷ்டத்தின்
அழைப்புமணி!
திறமைக்கோர்
திறவுகோல்!

முயற்சி
உழைப்புப் பயணத்தில்
உற்ற துணை!
சாதனைச் சக்கரத்தின்
அச்சாணி!

முயற்சி
திசையெங்கும் செல்லும்
தென்னையின் வேர்!
திருமகள் ஏறி வரும்
திவ்வியத் தேர்!

முயற்சி
வாழ்வின் வளம் காட்டும்
வழிக் கல்!
வெற்றிச் சாகுபடிக்கு
விதை நெல்!

முயற்சி
சோதனைப் பாதையில்
சுமை தூக்கும் ஒட்டகம்!
சோம்பல் அரக்கன்
நுழைய முடியா பெட்டகம்!

முயற்சி
நீ துவளும் நேரத்தில்
தோள் கொடுக்கும் தோழன்!
நீ வீழும் நேரத்தில்
தாங்கும் விழுது!

முயற்சி
இயலாமையை
ஏறி மிதிக்கும் யானை!
முயலாமையை
முறியடிக்கும் சேனை!

முயற்சி
முடக்கத்தை சுட்டுத்தள்ளும்
துப்பாக்கி!
தாழ்வு மனத்தைத்
தகர்த்தெறியும்
ஆர்டிஎக்ஸ்!

முயற்சி
அனுபவக் கட்டிடத்தின்
அஸ்திவாரம் !
ஆகாயத்திற்கும் உச்சிக்கும்
அடிவாரம்!

எனவே
முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் !

9 comments:

vasu balaji said...

/முயற்சி
அனுபவக் கட்டத்தின்
அஸ்திவாரம் !
ஆகாயத்திற்கும் உச்சிக்கும்
அடிவாரம்!/

கட்டடம்?

முயற்சிக்கு ஊக்குவிக்கும் கவிதை நன்று.

ஈ ரா said...

வானம்பாடிகள் said...
//கட்டடம்?//

தட்டச்சுப் பிழை... வருகைக்கும், சுட்டிக்காட்டியமைக்கும், வாழ்த்துக்கும் நன்றி..

திருத்தி விட்டேன்

கலகலப்ரியா said...

அருமை..! முயற்சிக்கு முயல்விக்க முயலும் உங்கள் முயற்சி தொடரட்டும்..!

snkm said...

முயற்சியுடன் முன்னேறு! வெற்றி பெறு! இவ்வாறே எல்லோரையும் வாழ்த்துவோம்! நன்றி!

சிங்கக்குட்டி said...

அருமையான பீலா பதிவு ..ஸாரி ஸாரி ...அருமையான பதிவு :-))

சும்மா நக்கலுக்கு ஈ ரா, பதிவு நல்லா இருக்கு.

தமிழ் said...

அருமை

R.Gopi said...

நண்பர் ஈ.ரா.அவர்களே...

முயற்சியின் பெருமையை உலகுக்கு மிக அழகாக எடுத்து சொன்ன உங்களின் முயற்சிக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி... அதிலும் கடைசியாக நீங்கள் சொன்ன :

//முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் ! //

மிக மிக அருமை... முயற்சி திருவினையாக்கும்..

உங்களின் தொடரான நல்ல விஷயங்களை சொல்ல முயற்சிக்கும் அந்த நல்ல உள்ளத்திற்கு என் சல்யூட்.....

நீங்கள் மென்மேலும் இதுபோன்ற உபயோகமான விஷயங்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா...

வாழ்த்துக்கள் ஈ.ரா...

(பின்குறிப்பு : என் தீபாவளி சிறப்பு பதிவிற்கு வருகை தந்து பரிசினை பெற்று கொண்டமைக்கு நன்றி...)

ஈ ரா said...

//அருமையான பீலா பதிவு .. ...அருமையான பதிவு//

வருகைக்கும் வைதலுக்கும்.. ...ஸாரி ஸாரி வாழ்தலுக்கும் நன்றி... சிங்கக்குட்டி ஜி...
//snkm said...

முயற்சியுடன் முன்னேறு! வெற்றி பெறு! இவ்வாறே எல்லோரையும் வாழ்த்துவோம்! நன்றி!
//
தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி

//திகழ் said...
அருமை //

முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திகழ் !

R.Gopi said...
//மிக மிக அருமை... முயற்சி திருவினையாக்கும்..

உங்களின் தொடரான நல்ல விஷயங்களை சொல்ல முயற்சிக்கும் அந்த நல்ல உள்ளத்திற்கு என் சல்யூட்.....

நீங்கள் மென்மேலும் இதுபோன்ற உபயோகமான விஷயங்களை தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எங்கள் அவா...//

நிச்சயம் ஜி.. உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவு இருக்கும்போது தொடர்ந்து எழுதவே விரும்புகிறேன். நன்றி..

//(பின்குறிப்பு : என் தீபாவளி சிறப்பு பதிவிற்கு வருகை தந்து பரிசினை பெற்று கொண்டமைக்கு நன்றி...)//

இன்னாபா, எல்லாருக்கும் கொடுக்கறதையே தலை தீபாவளி காரனுக்கும் கொடுக்கலாமா... பத்து, இருபத்து எக்ஸ்ட்ரா இருந்தாதான ஒரு மரியாதை..?

அப்புறம் நண்பர்களே, தலை தீபாவளிக்கு, இந்த தல மனைவி வீட்டுக்கு போய்விட்டதால் இந்த தாமதம்..

கிரி said...

//முயற்சி செய் !
அல்லது
முயற்சி செய்யவாவது
முயற்சி செய் !//

நான் இதை முயற்சிக்கிறேன் சி(ப)ல நேரங்களில் செயல்படுத்த முடியவில்லை.. மாற்ற நினைக்கிறேன் முடியவில்லை..சில நேரங்களில் என்மேல் எனக்கே எரிச்சலாகவும் உள்ளது.

தவறு செய்கிறோம் என்பது தெரிகிறது இருந்தும் அதை சரி செய்ய "முயற்சி" எடுக்க முடியவில்லை :-) பார்ப்போம் ....

//நண்பர்களே, தலை தீபாவளிக்கு, இந்த தல மனைவி வீட்டுக்கு போய்விட்டதால் இந்த தாமதம்..//

இந்த நேரத்துல பதிவை போட்டுக்கொண்டு இருக்கும் ஈரா விற்கு கடும் கண்டனம்..

மனைவி கூட சுத்துனுமா தலை தீபாவளிய கொண்டாடுனமான்னு இல்லாம இப்படி இணையத்தில் என்ன வேலை உங்களுக்கு?

Post a Comment