Thursday, October 15, 2009

தீபாவளி கொண்டாடலாமா கூடாதா ?


தீபாவளியின் வரலாறு என்ன என்பது எல்லாம் பெரும்பாலும் உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்... அதைப் பற்றிய விமர்சனங்களுக்கும் சமீப காலமாக பஞ்சம் இல்லை.....தீபாவளியை ஏன் கொண்டாட வேண்டும் என்ற கேள்விக்கு என் சிற்றறிவிற்கு எட்டியபடி பதில் கூற முயற்சி செய்திருக்கிறேன்...

வட இந்தியாவில் இப்பண்டிகையை எதிர்த்தோ அல்லது மறுத்தோ என்றும் பெரிதாக செய்திகள் கிளம்புவதில்லை...ஆனால் தமிழகத்தில் மட்டும் சலசலத்துக் கொண்டிருக்கும் சில அறிவுக் கொழுந்துகளுக்கும், அவர்கள் கருத்தையும் அவர்களையும் ரசித்துக் கேட்பதால் மனமாற்றத்துக்கு உள்ளாகும் சிலருக்கும் இப்பதிவு....

தீபாவளி - கண்ணன் நரகனை கொன்று நரர்களை பெரும் தீமையில் இருந்து காத்த நாளாக தொன்று தொட்டு கூறப்படுகிறது...

தீபாவளி எதிர்ப்பாளர்கள் கூறுவது என்னவென்றால் கிருஷ்ணன் என்பவரும், அவர் சம்பந்தமான எல்லா விஷயங்களுமே கட்டுக்கதை என்றும் இவை எல்லாம் ஆரியர்கள் அல்லது பிராமணர்களால் அவர்கள் ஆதாயத்துக்காக புகுத்தப்பட்டது என்பதும் தான்....(எனக்கு தெரிந்தவரை, யாரும் தீபாவளிக்காக ஐயருக்கு காசோ அல்லது வேறு ஏதோ ஆதாயம் செய்வதாகவோ,அல்லது பட்டாசுத் தொழிலிலும், ஜவுளியிலும் ஐயர்களுக்கு பெரும்பங்கு இருப்பதாகவோ தெரியவில்லை)

ஆரிய திராவிட மாயை என்பது சுத்த பொய் என்று சில ஆண்டுகளுக்குப் முன் பி.பி.சி. ஆராய்ச்சி முடிவை வெளியிட்டபோது, அது பிரபலம் அடையவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக பொய்யாகப் பேசியவர்களும் அதை வழி மொழிந்தவர்களும் தலை குனியவும் இல்லை, உண்மையை உணரவும் இல்லை..
இப்படித்தான் டார்வினின் பரிணாமக் கொள்கை என்று நான் மாங்கு மாங்கென்று படித்து பள்ளியில் வரலாற்றில் முதல் மாணவனாகவும் இருந்தேன். இப்போ என்னடாவென்றால் அசால்ட்டாக அந்த தியரியே தவறு என்று சொல்கிறார்கள்..

சந்திரனில் பிராண வாயு (ஆக்சிஜன்) கிடையாது என்றார்கள்..அதே நேரம் H2O இல்லாமல் இப்போ எப்படி தண்ணீர் கிடைத்தது என்று தெரியவில்லை..

இது போன்ற விடை சொல்ல முடியா விஷயங்களை அப்படியே விட்டுவிடுவதே நல்லது..இன்றைய ஆராய்ச்சி முடிவை நாளை தவறு என்பார்..எது உண்மை எது பொய் என்று இதற்கெல்லாம் நேரத்தை செலவு செய்யாமல், நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவரையும் சந்தோஷமாக வைத்து இருந்தால் அதனால் எந்த பாதகமும் வந்து விடாது.

அதே போல இங்கு தமிழ் நாட்டில் சில பேருக்கு ஒரு வினோத நோய் உண்டு... அது என்னவென்றால் அசுரன் என்று கூறப்பட்டால் அது தென்னவர்களை குறிப்பிடுவதாகவும், கடவுளர்களும், தேவர்களும் வடபுலத்தவர்கள் என்பதும்தான் அது... அதன் காரணமாக ராவணன் தமிழன், நரகன் தமிழன், ராமனும் கிருஷ்ணனும் வேற்றான் என்று மூளை சலவை செய்ய முயற்சிப்பார்கள்... அதனால் மக்களுக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டர்கள்.... மற்றவர்களின் பண்டிகைகளுக்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வாழ்த்துவார்கள்... இவர்கள் வாழ்த்து தேவையில்லை என்பது வேறு விஷயம்.. ஆனால் நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன்...

நல்லவன் - தேவ குணம் கொண்டவன். தீயவன் அசுர குணம் கொண்டவன். இதில் ஜாதி மத பேதம் இல்லை. நமக்குள் நல்லகுணமும் இருக்கும்; தீய குணமும் இருக்கும் இரண்டில் தீயதை விடுத்து நல்லதை கொள்ளலே இந்த கதைகளின் சாராம்சம்...

ஒரு வாதத்திற்கே வைத்துக் கொண்டாலும், முருகனும் சிவனும், அரங்கனும், தென்னவர்கள் தானே? தமிழ்ச் சங்கங்களும் அதன் தலைமையும் அவர்களால் அழகுபடுத்தப் பெற்றது தானே?
வடக்கே வாழ்ந்த கம்சன், துரியோதனன், சகுனி போன்றோர் அசுரர்கள் என்று விளிக்கப்படாவிடினும் அவர்கள் தீயசக்தியாகவேதானே உருவகப்படுத்தப்பட்டனர்? கிருஷ்ணன் கொன்ற சகடாசுரனும் இன்ன பல அசுரர்களும் வட இந்தியர்கள் தானே? எனவே இந்த விழாவை வடக்கு தெற்கு என்று பிரிக்கும் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல், ஐயமின்றி, சந்தோஷமாக கொண்டாடுங்கள்....

இந்த தீபாவளியின் கதையை வேண்டுமானால் நம்பாமல் போங்கள்.. ஆனால் தீமை என்பதை அழிக்க வேண்டும், நன்மை மலர வேண்டும் என்ற உள்ளர்த்ததையாவது உணருங்கள்... அதிலும் முக்கியமாக கிருஷ்ணனும் அவன் மனைவி சத்ய பாமாவும், அச்சுறுத்தும் தீயசக்தியாகிய நரகாசுரன், தம் மகனே ஆயினும் அவனை அழித்து உலக நன்மை ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறார்கள்...

பாசத்தினால், தவறுகளுக்கு துணை போகக் கூடாது, சத்தியத்தின் பக்கம் நின்று, தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அழிக்க வேண்டும் என்பது எவ்வளவு உயர்ந்த கருத்து? அதிலும், தவறு செய்தவனே, தண்டனைக்குப் பின் மனம் திருந்தி, இன்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று வேண்டுவது எவ்வளவு உன்னதம்?

காலத்தினால், பண்டிகையின் உள்ளர்த்தங்களும் நோக்கங்களும் அடிபட்டுப் போனாலும், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், இனிப்பு உண்ணுதல் போன்ற மகிழ்வூட்டும் பழ்க்கங்களாவது நடை முறையில் உள்ளனவே... அதை தொடர்வோமே, நண்பர்களே.....

சில பேருக்கு சில நேரங்களில் என்ன தீபாவளி கொண்டாட்டம்? காசை விரயம் ஆக்குகிறோம்? எவ்வளவோ பேர் கஷ்டப்படும்போது நமக்கென்ன புத்தாடை? என்று தோன்றும். ஆனால் அவர்கள் தீபாவளி அன்று வேண்டுமானால் புத்தாடை வாங்காமல் இருப்பார்கள் மற்ற பல சாதாரண நாட்களில் மிக விலை உயர்ந்த ஆடைகளை அணிவார்கள்; தேவையற்ற பல செலவுகளை செய்வார்கள்... (நானும் முன்னர் சில காலம் அதில் அடக்கம்)

நீங்கள் அந்த உணர்வில் இருந்தீர்களேயாயின், தயவு செய்து, விலை குறைந்த உடையை உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கு தெரிந்த அல்லது தெரியாத பல ஏழை சிறார்களுக்கு உங்களால் முடிந்த செலவில் உடைகளையும், பட்டாசுகளையும், இனிப்புக்களையும் வாங்கித் தாருங்கள்... அந்தக் குழந்தைகளுக்கு, இந்த சிறு செயல்களில் கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது அவர்களுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியாது... ... பல பேர் சந்தோஷமாக இருக்கும் போது அவர்களும் சந்தோஷமாக இருந்தால், அது உங்களுக்கு நிச்சயம் மன நிறைவையும் புண்ணியத்தையும் தரும்......

குறைந்த சத்தமுடைய பட்டாசு, மத்தாப்புகளை ஏற்றி கொண்டாடுங்கள் குதூகலமாக...

ஆம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.....தீபத்தின் ஒளியைக் காண்போம்...

18 comments:

M Arunachalam said...

Ee. Raa.,

Happy Thala Deepavali to you & your wife.

Let us not care about the non-believers & enjoy the Hindu festivals thoroughly.

Arun

சிங்கக்குட்டி said...

//குறைந்த சத்தமுடைய பட்டாசு, மத்தாப்புகளை ஏற்றி கொண்டாடுங்கள்//

சூப்பர் தீபாவளி வாழ்த்துக்கள்.

கலகலப்ரியா said...

அட..! இந்த ராம.. கிருஷ்ண... கடவுள்களின் குலம்.. கோத்ரம் எல்லாம் நிதானமா பார்த்துக்கலாம்..! நீங்க தீபாவளிய கொண்டாடுங்க..! இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!

(அது ஏன்.. தமிழ்மணம் கருவிப் பட்டை இருக்கு.. ஆனா அனுப்பலை.. ஓட்டும் போடலை..?)

கலகலப்ரியா said...

ஆஹா அனுப்பிட்டீங்க.. ! ஓட்டு போட்டுட்டோம்ல.. உங்க வாக்கு எங்க.. அதையும் போட்டு வைங்க.... பிற்காலத்தில உதவும்ல.. !

ஈ ரா said...

//அட..! இந்த ராம.. கிருஷ்ண... கடவுள்களின் குலம்.. கோத்ரம் எல்லாம் நிதானமா பார்த்துக்கலாம்..! நீங்க தீபாவளிய கொண்டாடுங்க..! இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..!//

நன்றிங்கோ..நீங்களும் கொண்டாடுங்கோ. !

//அது ஏன்.. தமிழ்மணம் கருவிப் பட்டை இருக்கு.. ஆனா அனுப்பலை.. ஓட்டும் போடலை..?)//

நானே இப்போதான் கொஞ்ச நாள் முன்ன, தமிழ் மனம், தமிழிச் கருவிப் பட்டை எல்லாம் சேர்த்தேன். அத பதியும்போதே பதிவாயச் செய்ய பழகல.. இப்போ சேர்த்துட்டேன்..

உங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி..

ஈ ரா said...

//வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அருண் ஜி

தோழர் சிங்கக்குட்டி..

ஒரு மார்கமாத்தான் லேட்டஸ்ட் பதிவ போட்டு இருக்கீங்க, அங்க வரேன்..

vasu balaji said...

தீபாவளி வாழ்த்துகள் தோழரே.

ராகவன் said...

டார்வினினுடைய தியரியை யாரும் தப்பூ என யாரும் சொல்லவில்லை, சில கிருத்துவ முஸ்லிம் நம்பிக்கையாளர் தவிர. அதனை ஆதரிக்கும் ஆதாரங்கள் கூடிக்கொண்டே போகும் காலத்தில் அதை சரியானதில்லை என்பதுதான் தவறு!

எப்படி சந்திரனில் தண்ணி கிடைகிறது எனபது விடை தெரியாத கேள்வி அல்ல. நிலாவில் ஈர்ப்புசக்தி குறைவு, இதனால் ஆக்ஸிசன் வாயு (O2) நிலையில் இருக்காது அவ்வளவுதான்.நிலா பாறையில் O2 உண்டு.

ஈ ரா said...

நன்றி ராகவன் சார்.,

//சில கிருத்துவ முஸ்லிம் நம்பிக்கையாளர் தவிர.//

ஹிந்துக்களுக்கும் தானே..

//எப்படி சந்திரனில் தண்ணி கிடைகிறது எனபது விடை தெரியாத கேள்வி அல்ல. நிலாவில் ஈர்ப்புசக்தி குறைவு, இதனால் ஆக்ஸிசன் வாயு (O2) நிலையில் இருக்காது அவ்வளவுதான்.நிலா பாறையில் O2 உண்டு.//

தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி

தமிழ் அமுதன் said...

தீபாவளி வாழ்த்துகள் ..!

ராகவன் said...

ஹிந்துக்களுக்கு பைபிள் குரான் மாதிரி வரிக்கு வரி பின்பற்ற வேண்டிய புத்தகம் இல்லாதால் அவர்களுக்கு டார்வினை நம்புவதில் பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். அவர்கள் டார்வினை ஏற்றுக்கொண்டு பரிணாமத்திற்கு கடவுள் உதவினார் என்பார்கள்.

வால்பையன் said...

//சந்திரனில் பிராண வாயு (ஆக்சிஜன்) கிடையாது என்றார்கள்.//

அப்படின்னு யாருங்க சொன்னது!

அங்க ஆக்ஸிசன் குறைவுன்னு சொல்லிருப்பாங்க!

ஈ ரா said...

நன்றி ஜீவன், உங்களுக்கும் தான்..!

////சந்திரனில் பிராண வாயு (ஆக்சிஜன்) கிடையாது என்றார்கள்.//

அப்படின்னு யாருங்க சொன்னது!

அங்க ஆக்ஸிசன் குறைவுன்னு சொல்லிருப்பாங்க!//

இதப் பாருயா, தல எல்லாம் இங்க வர்றதுக்கு, ஏதாவது தப்பா எழுதனும் போல..

இப்படியாச்சும் இங்கிட்டு வந்ததற்கு நன்றிகள், தீபாவளி வாழ்த்துக்கள்...உங்கள் குடும்பத்தார்க்கும், செல்ல மகளுக்கும்..

சுதாகர் said...

நச்-ன்னு இருக்குங்க....

snkm said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஈ ரா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுதாகர், snkm

R.Gopi said...

ஈ.ரா.

இனிய‌ த‌லை தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...

அருமையாக‌ அல‌சி எழுதி இருக்கிறீர்க‌ள்...

என் தீபாவளி சிறப்பு பதிவிற்கு வந்து பரிசு பெற்று சென்றமைக்கு நன்றி...

கிரி said...

//அந்தக் குழந்தைகளுக்கு, இந்த சிறு செயல்களில் கிடைக்கும் இன்பம் அளவிட முடியாது அவர்களுக்கு ஆராய்ச்சி செய்யத் தெரியாது.//


வழிமொழிகிறேன்

Post a Comment