Monday, October 19, 2009

பயணங்கள்


பயணங்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு சுகம்
காண்கின்ற காட்சிகள்
கற்பிக்கும் அனுபவம் !

கருவறை தொடங்கியே
பூமிக்குப் பயணமே -
புரியாத புதிராக
புதியதோர் ஜனனமே !

விடியலைத் தேடியே
விண்மீன்கள் பயணமே -
விடியலில் தொடங்கிடும்
கதிரவன் பயணமே !

காலத்தைக் கா(கூ)ட்டிடும்
கடி முட்கள் பயணமே -
நில்லாது சுற்றிடும்
நிலத்தன்னைப் பயணமே !

கரைகளைத் தேடியே
கடலலைப் பயணமே -
கடல் தன்னில் கரையவே
நதிகளின் பயணமே !

தேவையின் காரணம்
பலரது பயணமே -
தேடுதல் நோக்கியே
சிலரது பயணமே !

இல்லறம் துவங்கிட
இளமையின் பயணமே -
இயற்கையை ரசித்திட
இன்னும் சில பயணமே !


சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !

இருக்கின்ற இடம் விட்டு
இல்லாத இடம் தேடும்
தறிகெட்ட மனதிற்கு
முடிவில்லா பயணமே !

அலைகின்ற மனம் நிற்க
ஆன்மீகப் பயணமே
அமைதியை தந்திடும்
ஆழ்மனப் பயணமே !

11 comments:

வால்பையன் said...

அண்ணே குழந்தைங்க பாட்டு மாதிரி இருக்கு!

கொஞ்சம் உப்பு, உறப்பு சேருங்கண்ணே!

கலகலப்ரியா said...

//
சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !//

fantastic...!

ராமலக்ஷ்மி said...

அத்தனை பயணங்களையும் எத்துணை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். எதைக் குறிப்பிட எதை விட? இருந்தாலும்..

//தேவையின் காரணம்
பலரது பயணமே -
தேடுதல் நோக்கியே
சிலரது பயணமே !//

விடியலைத் தேடியே
விண்மீன்கள் பயணமே -
விடியலில் தொடங்கிடும்
கதிரவன் பயணமே !//

//கரைகளைத் தேடியே
கடலலைப் பயணமே -
கடல் தன்னில் கரையவே
நதிகளின் பயணமே !//

//சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !//

மிகவும் ரசித்த வரிகள்.

ஈ ரா said...

//வால்பையன் said...

அண்ணே குழந்தைங்க பாட்டு மாதிரி இருக்கு!//

முன்னாடியே ஒரு டிஸ்கி போடலாம்னு நினைச்சேன்.. மொக்க கொடுதுடீங்க...

எனிவே, குழந்தபுள்ளதான நானுனு வுட்டுருங்க..

கொஞ்சம் உப்பு, உறப்பு சேருங்கண்ணே!//

அடுத்து உமக்கேத்தமாதிரி ஒன்னு ட்ரை பண்றேன்..
இப்போதைக்கு என் பழசு எதையாவது பாருங்க தேறுதான்னு.....


கலகலப்ரியா said...

//
சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !//

fantastic...!

தேங்க்ஸ்..

//ராமலக்ஷ்மி said...

அத்தனை பயணங்களையும் எத்துணை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். எதைக் குறிப்பிட எதை விட?

நன்றி மேடம்

vasu balaji said...

அழகான பயணம். பாராட்டுகள் ஈரா.

ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..வாழ்த்துக்கள் நண்பா
வோட்டட்4/4 & 10

ஈ ரா said...

நன்றி வானம்பாடிகள் & வசந்த் ஜி

R.Gopi said...

//பயணங்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும் ஒரு சுகம்
காண்கின்ற காட்சிகள்
கற்பிக்கும் அனுபவம் !//

ப‌ற‌வைக‌ள் ப‌ல‌வித‌ம்
ஒவ்வொன்றும் ஒரு வித‌ம் ... இந்த‌ பாட்டு ஞாப‌க‌ம் வந்த‌து...

//கருவறை தொடங்கியே
பூமிக்குப் பயணமே -
புரியாத புதிராக
புதியதோர் ஜனனமே !//

பிற‌ப்பை பற்றி மிக‌ அழ‌காக‌ சொல்லி இருக்கிறீர்க‌ள்...

//கரைகளைத் தேடியே
கடலலைப் பயணமே -
கடல் தன்னில் கரையவே
நதிகளின் பயணமே !//

வாவ்... தூள்... ந‌தி எங்கே போகிற‌து..க‌ட‌லை தேடி...

//சாதிக்கத் துணிந்தோர்க்கு
சாகின்ற வரைதன்னில்
சரித்திரம் படைக்கவே
சாகசப் பயணமே !//

ம்ம்ம்... ப‌லே.. சாத‌னையாள‌ர்க‌ளை பற்றி சில வார்த்தையில் அழ‌காக‌ அட‌க்கி விட்டீர்க‌ள்...

//அலைகின்ற மனம் நிற்க
ஆன்மீகப் பயணமே
அமைதியை தந்திடும்
ஆழ்மனப் பயணமே !//

ந‌ல்ல‌ முடிவு... வாழ்த்துக்க‌ள் ஈ.ரா.

(என் குறிப்பு : எங்களுக்கு த‌மிழ் ட்யூஷ‌ன் எடுக்க‌ முடியுமா??)

ஈ ரா said...

R.Gopi said...

//
(என் குறிப்பு : எங்களுக்கு த‌மிழ் ட்யூஷ‌ன் எடுக்க‌ முடியுமா??)//

நன்றி தலைவா! நான் அவ்வளவு பெரிய ஆளு இல்ல...இங்க நிறைய பெரிய தலைங்க இருக்காங்க... (அது சரி, என்ன வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே)

சிங்கக்குட்டி said...

ரொம்ப நல்ல பயணம் வாழ்த்துக்கள் ஈரா.

R.Gopi said...

//ஈ ரா said...
R.Gopi said...

//
(என் குறிப்பு : எங்களுக்கு த‌மிழ் ட்யூஷ‌ன் எடுக்க‌ முடியுமா??)//

நன்றி தலைவா! நான் அவ்வளவு பெரிய ஆளு இல்ல...இங்க நிறைய பெரிய தலைங்க இருக்காங்க... (அது சரி, என்ன வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலியே)//

அய்யோ... ச‌த்திய‌மா இல்லீங்ணா....

Post a Comment