Tuesday, October 20, 2009

முத்தம்


மழலைக்கு கிடைத்திடும்
நித்தம் நித்தம்
மறுபடி வேண்டிடும்
நம்தம் சித்தம் !

அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !

மறந்திட முடியா
முதல் முதல் முத்தம்
படிக்கிற காலத்தில்
பிடித்தவள் முத்தம் !

கவலைகள் மறந்திட
கிடைத்திடும் முத்தம்!
கணவன் மனைவிக்கு
கட்டிலில் நித்தம் !

பிணக்குகள் தீர்கையில்
இணங்கிடும் முத்தம்
மருந்துக்கும் பார்க்காது
சுத்தம் பத்தம்!

முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !

கடல் போல் பெருகிடும்
காதலின் வெள்ளம்
கமண்டலமாக்கி
அடக்கிடும் முத்தம் !

உதடுகள் இரண்டும்
உரசிடும் நேரம்
உள்ளத்தில் இருந்து
உடைந்திடும் பாரம் !

எதையோ தேடிட
எங்கும் வேர்க்கும் !
கண்களை மூடியும்
கருவிழி பார்க்கும் !

மீசை குத்திட
ஆசையும் மீறும் !
வெளிச்சம் மறைய
வெட்கம் தொலையும் !

உடல்தனில் எங்கும்
உரியவர் எச்சம்
ஊடலில் கிடைத்திட
உலகமே துச்சம் !

முத்தம் என்பது
முன்னுரை ஆகும் !
முடிவுகள் இன்றி
மோகத்தில் வேகும் !

சோகத்தை எல்லாம்
சுலபத்தில் கொல்லும்!
சொர்க்கத்தின் எல்லையை
சுலபமாய் வெல்லும் !

உச்சி மோர்கையில்
உறவுகள் பேணும் !
உதடுகள் சேர்கையில்
உச்சங்கள் காணும் !

முத்தம் என்பது -

கட்டிலை ஆக்கிடும்
போர்க்களம் ! - தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !

இளமை ஏக்கத்தின்
மொத்த முத்தம்!
இனிதாய்க் கொடுப்பதில்
என்ன குத்தம் ?

முத்தத்தில்
வகைகள் எத்தனை ?
முடிந்த பின்
எதற்கு நிந்தனை ?

டிஸ்கி : வால், இதுவாச்சும் வேலைக்கு ஆகுதா இல்லையா?

13 comments:

அகல்விளக்கு said...

//தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !//

வாலுக்கேத்த கவிதையா...

வாலு பாத்தாரு கவீஜயாக்கிறுவாரு..

சொய்ய்ய்ய்........

வால்பையன் said...

அண்ணே இப்படி சந்தம், பந்தம் எதுகை மோனை போட்டு எழுதுறது தான் குழந்தை கவிதை!

நீங்களே பாருங்கள் வார்த்தைகளுக்காக சில இடங்களில் நாம் செயற்கையாக சொற்களை திணிக்க வேண்டியிருக்கு!

இம்மாதிரியான மரபுகளில் இருந்து வெளியே வாங்க!
கவிதையின் வடிவம் மாறி ரொம்ப வருசமாச்சு!

எனக்காக உள்ளே பீர் பாட்டில் வச்சதுக்கு நன்றி!

போதையுடன்
வால்பையன்!

R.Gopi said...

//முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !//

அட்ட‌காச‌மான‌ வ‌ரிக‌ள்... ரொம்ப‌ ரைமிங்கா இருக்கு ஈ.ரா..

//முத்தம் என்பது
முன்னுரை ஆகும் !
முடிவுகள் இன்றி
மோகத்தில் வேகும் !//

நான் இப்ப‌டி மாத்தி எழுதி பார்த்தேன்... த‌வ‌றாக‌ நினைக்க‌ வேண்டாம் ஈ.ரா.அவ‌ர்க‌ளே..

முத்த‌ம் என்ப‌து
முன்னுரை ஆகும்
முடிவுக‌ள் இன்றி
தொட‌ர்க‌தை ஆகும்!

மொத்த‌த்தில் (முத்த‌த்தில் அல்ல‌...) எங்க‌ளை முத்த‌ ம‌ழையில் ந‌னைத்து விட்டீர்க‌ளே ஈ.ரா....

ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌ "ஈ.ரா."..... வாழ்த்துக்க‌ள்....

ஈ ரா said...

//அகல் விளக்கு said...

வாலுக்கேத்த கவிதையா...

வாலு பாத்தாரு கவீஜயாக்கிறுவாரு..//

அவரு கவுஜயாக்குற அளவுக்கு சரக்கு இல்லன்னுட்டாரு... தப்பிச்சுட்டேன்... முதல் வருகைக்கு நன்றி அகல் விளக்கு

//வால்பையன் said...

அண்ணே இப்படி சந்தம், பந்தம் எதுகை மோனை போட்டு எழுதுறது தான் குழந்தை கவிதை!
//

என்னன்னே பண்றது.. எங்க பொழப்பே அதுலதானுங்கன்னா ஓடுது..

//இம்மாதிரியான மரபுகளில் இருந்து வெளியே வாங்க!
கவிதையின் வடிவம் மாறி ரொம்ப வருசமாச்சு!//

முயற்சி பன்றேனுங்கன்னா, என்ன ஒன்னு, நம்ப டைரக்டர் நண்பர் ஒருத்தருக்கு இது பிடிச்சு போய், லேசா மாத்தி தரச் சொல்லி இருக்காரு ஒரு படத்துக்கு.. பிக்ஸ் ஆனா பிறகு சொல்றேன்

//எனக்காக உள்ளே பீர் பாட்டில் வச்சதுக்கு நன்றி!//

எதோ என்னால முடிஞ்சது, ஒன்னாச்சும் உங்களுக்கு கிடைச்சுதே...

/போதையுடன்
வால்பையன்!//

போதையிலேயே இப்படியா, தெளிவுன்னா நான் அப்பீட்டு....

இன்னொரு டிஸ்கி : குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு...

அப்புறம் : உங்க நேர்மை எனக்கு பிடிசுருக்குன்னா

R.Gopi said...

//அட்ட‌காச‌மான‌ வ‌ரிக‌ள்... ரொம்ப‌ ரைமிங்கா இருக்கு ஈ.ரா..//

நன்றி கோபி... இத மாதிரியும் தொடர்ந்து எழுதுவேன்..

கலகலப்ரியா said...

நீங்க பேசாம.. சினிமாவில பாட்டு எழுதலாமுங்க.. சூப்பர் ரைமிங்..

vasu balaji said...

கலகலப்ரியா said...

/நீங்க பேசாம.. சினிமாவில பாட்டு எழுதலாமுங்க.. சூப்பர் ரைமிங்../

ஆமாம். ஆனா 4 படத்துக்கு பிச்சி பிச்சி குடுக்கணும். இல்லைன்னா பொழைக்க முடியாது.

ஈ.ரா. ரொம்ப அழகான முத்தங்கள்.

ஈ ரா said...

//கலகலப்ரியா said...

நீங்க பேசாம.. சினிமாவில பாட்டு எழுதலாமுங்க.. சூப்பர் ரைமிங்..
//

பயமாருக்கு, அது நடந்துடுமோன்னு பயமா இருக்கு....

//ஆமாம். ஆனா 4 படத்துக்கு பிச்சி பிச்சி குடுக்கணும். இல்லைன்னா பொழைக்க முடியாது.

ஏற்கனவே கொடுத்தது எல்லாம் அவிங்க ஆரம்பிக்கவே இல்ல.. பார்ப்போம்..

ஈ.ரா. ரொம்ப அழகான முத்தங்கள்.//

ரொம்ப ரொம்ப நன்றி சார்...

Anonymous said...

mutham arumai.. mutham arumai....

சிங்கக்குட்டி said...

சூப்பர் ஈ ரா.

ஆனா?!....என்கிட்டே தப்பிக்க முடியாது? யார் அந்த பெண்?

உண்மையை சொல்லுங்க, இந்த வார்த்தைகள் வெறும் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

க.பாலாசி said...

//முத்தம் என்பது -

கட்டிலை ஆக்கிடும்
போர்க்களம் ! - தரும்
போதையில் அது ஒரு
பீர்க்குளம் !//

ஆகா...தத்துவம்....

முத்தத்தில் இத்தனை வகைகளா?....மொத்தத்தில் நல்ல கவிதை....

ஈ ரா said...

நன்றி சிங்கக்குட்டி,

நன்றி பாலாசி

புலவன் புலிகேசி said...

//அன்பு முத்தம்
அன்னையின் முத்தம் !
அவசர முத்தம்
காதலி முத்தம் !//

காதல் என்றாலே அவசரம் தான்...

ஊடகன் said...

//முத்தம் என்பதும்
ஒருவகை யுத்தம் !
முடிவினில் ஜெயிப்பது
முனகலின் சத்தம் !//

போதும் தலைவா தாங்கல............. இதற்க்கு முத்தத்தை பற்றி எவனாலும் எழுத முடியாது.........
நல்ல இருந்தது.........

Post a Comment