Wednesday, November 4, 2009

ஏழைத் தாய்


வறுமை
தாங்க முடியவில்லை!

குடிகாரக் கணவன் !
கொலைப் பட்டினியில்
குழந்தைகள் !

டீக்கடைக்குக்
கடன் பாக்கி !
பால் டின் வாங்க
பணம் இல்லை !

இப்படி ஓர் வாழ்க்கை
இன்னும் தேவையா ?

இன்றே சாகிறேன்
தீக்குளித்து !

நாளை முதல்
மண்ணெண்ணெய்
விலை ஏறுகிறதாம் !

20 comments:

Raji said...

வறுமையைப் பற்றிய கவிதை மிக மிக அருமை.

//இன்றே சாகிறேன்
தீக்குளித்து !

நாளை முதல்
மண்ணெண்ணெய்
விலை ஏறுகிறதாம்//
சே! என்ன சொல்றதுன்னே தெரியல.

ப்ரியமுடன் வசந்த் said...

//இன்றே சாகிறேன்
தீக்குளித்து ! //

என்ன சொல்வது..

நிலைகெட்ட மாந்தர் நிலை கெட்டு..

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை

அருமையான கவிதை

R.Gopi said...

சோகமாக ஆரம்பித்து முடிவில் அதிரடி கலந்த நகைச்சுவையான, சிந்திக்க வைத்த சோகம் இருந்தது இந்த பதிவின் வெற்றி ஈ.ரா...

சுந்தரோட போஸ்டிங்ல இருந்த உங்களோட கவிதை வரிகள் அருமை... அது தலைவர் பிறந்த நாளுக்கு எழுதினது தானே...

உங்க‌ள‌ பார்த்து, நான் கூட‌ ஒரு க‌விதை (!!) மாதிரி எழுதினேன்...

ஈ ரா said...

//ஆர்.வி. ராஜி said...
சே! என்ன சொல்றதுன்னே தெரியல.

பிரியமுடன்...வசந்த் said...

கொடுமையிலும் கொடுமை இளமையில் வறுமை

R.Gopi said...
சிந்திக்க வைத்த சோகம் இருந்தது இந்த பதிவின் வெற்றி ஈ.ரா...//

உணர்வுகளைப் புரிந்து கொண்டு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே..

//சுந்தரோட போஸ்டிங்ல இருந்த உங்களோட கவிதை வரிகள் அருமை... அது தலைவர் பிறந்த நாளுக்கு எழுதினது தானே...//

ஆமாம் ஜி.. சுந்தர் அதை அதிகம் ரசிப்பது உண்டு...எனவே அடிக்கடி அதை பிரபலப்படுத்துவார்... அவருக்கும் என் நன்றிகள்..

vasu balaji said...

/நாளை முதல்
மண்ணெண்ணெய்
விலை ஏறுகிறதாம் !/

வலிக்கும் யதார்த்தம். அருமையாச் சொல்லி இருக்கிறீர்கள்.

ரோஸ்விக் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com

Anonymous said...

அழுத்தமான பதிவு.
வறுமை கொடிது.

கலகலப்ரியா said...

கடைசி வரி அசத்தல்..!

கிரி said...

ஈரா உங்களின் பலமே எளிமை தான்..

ரொம்ப நல்லா இருந்தது.. உடன் வருத்தமாகவும்

ஈ ரா said...

நன்றி வானம்பாடிகள், ரோஸ்விக், bxbybz ,கலகலப்ரியா & கிரி

kppradeep said...

EERAA sir,
good one.You are too good in Tamil
Keep it up.

ஈ ரா said...

Thanks and Welcome Pradeep sir

பெசொவி said...

எங்காவது "நச்" கவிதைப் போட்டி இருந்தால் உங்கள் இந்த கவிதையை பரிந்துரைக்கிறேன்.

ஈ ரா said...

நன்றி பெயர் சொல்ல விருப்பமில்லை

சிங்கக்குட்டி said...

வார்த்தைகளின் வலிகள் வறுமையை விட கொடுமை.

ஆக கவிதையாய் இது அருமை.

Bhuvanesh said...

நீங்க சரியான "எதார்த்த கவி"

ஈ ரா said...

நன்றி சிங்கக்குட்டி,

நன்றி புவனேஷ்

Thenammai Lakshmanan said...

arumaiyaana kavithai E. RA.,

kadasi vari thaan miga arumai

velji said...

வறுமையின் கொடுமையை கலக்கமுறும் வகையில் கவிதையாக்கியிருக்கிறீர்கள்.படம் மேலும் சேதி சொல்லுகிறது.அருமை.

vasu balaji said...

பாராட்டுக்கள் ஈ.ரா. தொட்டாச் சிணுங்கிக் காதல் யூத்ஃபுல் விகடனில்
http://youthful.vikatan.com/youth/Nyouth/eraa141109.asp

Post a Comment