Friday, August 14, 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்? (பகுதி 3)


ஒரு நாளில் கிடைத்ததா
உன்னத சுதந்திரம்?
இல்லை நண்பா ..
இதற்காக நாம் இழந்தது
இரண்டு நூற்றண்டுக்கும் மேல்!

வலிமையால் மட்டுமல்ல
பலர் அனுபவித்த
வலியால் வந்த
விடுதலை இது !

இவர்களின்
இரத்தமே பாசனமானதால்
செம்மண்ணான
சமவெளிகள் ஏராளம் !

அவர்கள் இழந்த
மூச்சினால் தான்
நம்மால் இன்று
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க முடிகிறது !

நண்பர்களே
நாம் இனி எந்த
அந்நிய ஆதிக்கத்துக்கும்
அடிபணியத் தேவையில்லை !
எந்த அந்நியருக்குமெதிராக
கொடிபிடிக்கத் தேவையில்லை !

ஆனால் இன்றோ -
செம்மல்கள் வாங்கித் தந்த
சுதந்திரம்
செம்மறிகளிடம்!

உயிரையும் உடைமையும்
தியாகம் செய்தவர்களின்
வாரிசுகள்
இருக்குமிடம் தெரியாது !
ஆனால்
உண்டு கொழுத்த
ஊழல் பெருச்சாளிகள்
ஊர்வலமாய் !

அரசியல் மட்டுமல்ல
அதிகார வர்க்கமும் -
அன்னியரைக் காட்டிலும்
அந்நியமாய் !

கடமையைச் செய்யவே
கையூட்டு கேட்கும்
அற்ப அரசியல்
ஆலவிருட்சமாய் !

நேர்மையும் - கடமையும்
கூட்டு நுண் நோக்கியில்
மட்டுமே
காணத்தக்க அதிசயமாய் !

ஜன நாயகம்
பண நாயகமாகிப்
பல ஆண்டுகள் கழிந்து
பாமரன்
இன்னமும் பட்டினியில் !

புரியாத புள்ளி விவரங்கள்
புயல் போன்ற இலவசங்களால்
மறைக்கப்படுகின்றன !

தொலைநோக்கு இல்லா
தலைவர்கள் பின்னே
தொண்டர்கள் பல கோடி !

இந்நிலை மாறும் நாள்
என்னாளோ -
அந்நாள்தான்
பொக்கைக் கிழவரின்
புன்னகைச் சிரிப்பைப்
புதிதாய்க்
காணும் நாள் !

அந்நாள் தான்
அதர்மம் அடியோடு அழிந்து
தர்மம் தலையெடுக்கும்
தளிர் நாள் !
தன்னலமற்ற வழியில்
அணிவகுக்கும்
அருமை நாள் !

வேறுபாடு தொலைக்கும்
விடியல் நாள் !
சிங்க நாதம் முழங்கப் போகும்
சரித்திரப் பொன்னாள் !

நண்பர்களே -
நாம்தான் இத்தேசத்தை
தாங்க வேண்டிய
தூண்கள் !
இப்பாரத நாட்டின்
அஸ்திவாரம் மிகப்
பலமானது !
காலத்தால் வந்த
கரையான்கள்
கரைந்து போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை !

அந்நாளை நோக்கி
நடை கொள்வோம் !
அதற்கெதிரான
தடை வெல்வோம் !

மனதில் உறுதி கொள்வோம்
மறு வாழ்வு பெறுவோம்!
வாழ்க பாரதம் !
வாழ்க வையகம் !


(நிறைந்தது )
படங்கள் : இணையம்

6 comments:

பாசகி said...

Awesome One Ji! Happy Independance Day!

//இந்நிலை மாறும் நாள்
என்னாளோ -
அந்நாள்தான்
பொக்கைக் கிழவரின்
புன்னகைச் சிரிப்பைப்
புதிதாய்க்
காணும் நாள் !//

உண்மை :(

R.Gopi said...

//காலத்தால் வந்த
கரையான்கள்
கரைந்து போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை !//

நல்லா எழுதி இருக்கீங்க ஈ.ரா..

சுதந்திர நாள் சிறப்பு பதிவிற்கு இங்கே செல்க..

http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post.html

ஈ ரா said...

வருகைக்கு நன்றி சாலமன் அண்ட் பாசகி,

கோபி ஜி, வந்துடுவோம்

R.Gopi said...

ஈ.ரா...ரஜினியின் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி ஆடியோ இப்போது ப‌திவிலேயே அப்டேட் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து...

ந‌ன்றி....

snkm said...

இந்நிலை மாறும் என்று தானே காத்திருக்கிறோம், நம்பிக்கையுடனே!

ராமலக்ஷ்மி said...

//காலத்தால் வந்த
கரையான்கள்
கரைந்து போகும் நாள்
வெகு தொலைவில் இல்லை !//

நம்பிக்கையூட்டும் நல்வரிகள்!

Post a Comment